நான் 300 ரன்கள் அடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்! – இரானி கோப்பை கதாநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி!

0
196
Jaiswal

உள்நாட்டு டெஸ்ட் தொடரான இரானி கோப்பை டெஸ்ட் தொடர் தற்சமயம் நடந்து வருகிறது. இதில் ஒரு போட்டியில் கடந்த ரஞ்சி சாம்பியன் மத்திய பிரதேச அணியும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதின.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. பிரபல வீரர் மயங்க் அகர்வால் இரண்டு ரண்களில் வெளியேற அனுபவ வீரர் அபிமன்யு ஈஸ்வரனுடன் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார்.

- Advertisement -

இவர்கள் இருவரும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை தங்களின் சிறப்பான பேட்டிங் மூலம் உருவாக்கித் தந்தார்கள். இந்தக் கூட்டணி 371 ரன்கள் பிரம்மாண்ட பார்ட்னர்ஷிப் அமைத்து எதிரணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி விட்டார்கள்.

முதல் இன்னிங்சில் அபிமன்யு ஈஸ்வரன்
154 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, இளம் வீரர் ஜெய்ஷ்வால் மிகச் சிறப்பாக விளையாடி 259 பந்துகளில் இரட்டை சதம் அடித்து 213 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 30 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடக்கம். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 484 ரன்கள் எடுத்தது. இதை எடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய மத்திய பிரதேச அணி 294 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு மிடில் வரிசையில் விளையாடிய அதித் சேத் மட்டுமே 30 ரன்கள் எடுத்து குறிப்பிடும்படியாக விளையாடினார். அணி பெரிய இக்கட்டில் இருந்த பொழுது இந்த முறையும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் மிகச் சிறப்பாக விளையாடி எதிரணிக்கு சரியான இலக்கை நிர்ணயிக்க அடித்தளம் இட்டார்.

- Advertisement -

அதிரடியாக விளையாடிய அவர் 157 பந்துகளில் 16 பவுண்டரி மூன்று சிக்ஸர்களுடன் 144 ரன்கள் குவித்து அசத்தினார். ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து விளையாடிய மத்திய பிரதேச அணி 198 ரண்களுக்கு ஆட்டம் இழக்க, ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டிக்கு பிறகு பேசிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் ” நான் ஆட்டம் இழக்காமல் இருந்து 300 ரன்கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் நான் இப்பொழுதும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். ஆரம்பத்தில் வந்து நன்றாக நகர்ந்து கொண்டிருந்தது. எதிரணி பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசும் பொழுது நான் அடித்தாட முயற்சி செய்து கொண்டிருந்தேன். அடுத்து பந்து வீச்சாளர்களின் திட்டம் பற்றி எனது அனுபவம் வாய்ந்த பார்ட்னர் உடன் விவாதித்தேன். அதிலிருந்து நான் என் ஆட்டத்தை மாற்றி அமைத்துக் கொண்டேன். முதல் நாள் ஆட்டத்தில் எனக்கு அனுபவம் வாய்ந்த பார்ட்னர் ஈஸ்வரன் இருந்தது வசதியானது. அவர் என்னை வழி நடத்தியது எனக்கு பேட்டிங் செய்ய உதவியது. அவருடனும் மூத்த வீரர்களுடனும் பேட்டிங் செய்தது எனக்கு நல்ல அனுபவம். மேலும் நல்ல கற்றலாகவும் இருந்தது!” என்று கூறியுள்ளார்!

மும்பையை சேர்ந்த இளம் வீரரான ஜெய்ஸ்வால் 15 முதல் தர போட்டிகளில் விளையாடி 1845 ரன்களை 80.21 ரன் சராசரியில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளைப்பந்து டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரில் இவர் ராஜஸ்தான் அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது!