“பாபர் ரிஸ்வான் மாதிரி இருந்தா நல்லது.. ஜாலியா பவுலிங் பண்ணலாம்!” – ஹர்திக் பாண்டியா அதிரடி ஸ்டேட்மென்ட்!

0
3010
Hardik

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் நேற்று பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராகப் பெற்ற தோல்வி, இதுவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இடம் பெற்ற தோல்வியை விட மோசமான தோல்வியாக பதிவாகி இருக்கிறது.

நேற்றைய போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தும் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மிகவும் மோசமான செயல்பாடாக பலராலும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமும் 30 ஓவர்களில் கிடைத்தது. அவர்கள் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 155 ரன்கள் எடுத்திருந்தார்கள். எப்படியும் பந்துக்குப் பந்து விளையாடினால் கூட 280 ரன்கள் என்கின்ற நல்ல கவுரவமான ரண்களுக்கு சென்று இருக்க முடியும்.

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ரன் அழுத்தத்தை கூட்டிக் கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விளையாட வேண்டும் எனும் பொழுது, மொத்தமாக எல்லோரும் ஆட்டம் இழந்து விட்டார்கள். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தவறு செய்தார்கள் என்பதைவிட, இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

இதுகுறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “பாபரும் ரிஸ்வானும் பொறுமையாக விளையாட கூடியவர்கள். அவர்கள் ரன்கள் அடிப்பதற்கான எந்த வாய்ப்பையும் எடுக்கவில்லை. அதனால் நாங்கள் எப்போதும் ஆட்டத்திற்குள் இருப்போம் என்று நினைத்தோம். பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் எதுவும் இல்லை.

- Advertisement -

ஆனால் அவர்கள் எங்களை தாக்கி விளையாடவோ ரன்களுக்கு போகவோ எதுவும் செய்யவில்லை. இதனால்தான் எங்களால் டாட் பந்துகளை வீச முடிந்தது. இரண்டு வீரர்கள் ஒரே மாதிரி பேட் செய்து, அதில் ஒருவர் வெளியேறினால், அது பல கதவுகளை திறக்கும் என்று நான் பார்த்திருக்கிறேன்!” என்று கூறி இருக்கிறார்!

மேலும் பாகிஸ்தான் அணியின் வீரர் முகமது அமீர் கூறும் பொழுது ” பாபர் தன்னுடைய மொத்த இன்னிங்ஸையும் அழுத்தத்தின் கீழ் விளையாடினார். எப்பொழுது அடிக்க வேண்டிய நேரம் வந்ததோ அப்பொழுது அவரால் முடியவில்லை. அவரைப் போன்ற ஒரு குவாலிட்டி பேட்டர் இன்னிங்ஸை எடுத்துச் சென்று இருக்க வேண்டும். மிடில் ஆர்டர் களை நாங்கள் குறை சொல்ல முடியாது!” என்று அவர் கூறியிருக்கிறார்!