“இந்த ஒரு வீரர் மட்டும் வந்தா ரோஹித் சர்மாவுக்கு வேர்ல்ட் கப் ஜெயிக்க ஈஸியா இருக்கும்” – முகமது கைஃப் நம்பிக்கை!

0
4116
Kaif

இந்தமுறை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் வரை முடிந்து பங்குபெறும் 10 அணிகளும் உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் உலகக்கோப்பை நடப்பதால் இந்திய அணிக்கு சாதகம் இருக்கும் அளவுக்கு கூடவே கொஞ்சம் அழுத்தமும் அதிகமாக இருக்கிறது. உள்நாட்டில் கடந்த முறை 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் வென்றிருந்தது. எனவே இந்த முறையும் கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு இருக்கிறது!

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நகர அதற்குப் பிறகு கேப்டனாக ரோகித் சர்மா தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருவரும் பொறுப்பேற்றதற்கு பிறகு டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலான உலக கோப்பையில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். மேலும் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு உலகக் கோப்பையையும் இந்திய அணி கைப்பற்றாமல் இருப்பது பெரிய பின்னடைவாக இருக்கிறது.

இதே சமயத்தில் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மட்டும் அல்லாது இந்திய அணியிலும் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றக்கூடிய மேட்ச் வின்னிங் பவுலர் ஜஸ்ட்பிரித் பும்ராவை காயத்தால் இழந்திருப்பது அவருக்கு தனிப்பட்ட முறையில் கேப்டனாக ஒரு பெரிய இழப்பாக இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காயத்தால் இந்திய அணியில் இருந்து விலகிய வரை பும்ரா ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரராக எல்லா மட்ட கிரிக்கெட்டிலும் இருந்திருக்கிறார். தற்பொழுது குணமடைந்து வரும் அவர் செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் முகமது கைஃப் ” உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. ஏனென்றால் மற்ற அணிகளை ஒப்பிடும் பொழுது நாங்கள் உள்நாட்டில் விளையாடுவதால் எங்களுக்கு உள்நாட்டு சூழ்நிலைகள் மிக நன்றாக தெரியும். சுழற் பந்துவீச்சாளர்கள் வெற்றியில் மிக முக்கிய பங்காற்ற கூடியவர்களாக இருப்பார்கள். போட்டியை வெல்வதற்கான வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு சவாலான விஷயம் என்னவென்றால், அணியின் அனைத்து மூத்த வீரர்களையும் உடல் தகுதி மற்றும் பார்ம் வாரியாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நாங்கள் நன்றாக பேட்டிங் செய்ய முடிந்தால் நாங்கள் தோற்கடிப்பதற்கு மிகவும் கடினமாக இருப்போம். நாங்கள் ரோகித் சர்மா விராட் கோலி பற்றி பேசுகிறோம். இந்த மூத்த வீரர்கள் அனைவருமே மீண்டும் வந்து மிகப்பெரிய அளவில் பங்காற்ற வேண்டும்.

காயமடைந்து மறுவாழ்வில் உள்ள பும்ரா இப்பொழுது அணிக்கு திரும்பக்கூடிய நிலையில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எனவே இது ஒரு நல்ல செய்தி. பும்ரா அணிக்கு தேவை என்று நினைக்கிறேன். ஒருவேளை கேப்டனாக ரோகித் சர்மா பும்ராவை தவறவிட்டிருக்கலாம் என்று உணர்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!