இது என் நல்ல இன்னிங்ஸ் கிடையாது – ரோகித் சர்மா வெளிப்படையான அதிரடி பேச்சு!

0
2851
Rohitsharma

எட்டாவது உலக கோப்பை தொடரில் இன்று இந்திய அணி நெதர்லாந்து அணியை ஆஸ்திரேலிய சிட்னி மைதானத்தில் எதிர்த்து பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் மூவரும் அரை சதங்கள் விளாச, இந்திய அணி தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் நெதர்லாந்து அணியை 123 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதை தீர்மானித்தார். கேஎல் ராகுல் வெளியேற நிலைத்து நின்ற ரோகித்சர்மா அரை சதம் அடித்தார். இதில் அவர் மூன்று சித்தர்கள் நான்கு பௌண்டரிகள் விளாசினார். மொத்தம் 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த ஆட்டம் வழக்கமான ரோகித்சர்மா ஆட்டம் போல் இல்லை என்பது தான் உண்மை. அவர் இந்த ஆட்டத்தில் ஒரு கடினமான மற்றும் எளிமையான இரண்டு கேட்ச் வாய்ப்புகளை தந்தார். இந்த இரண்டையும் நெதர்லாந்து வீரர்கள் பிடிக்க தவறி விட்டார்கள்.

மேலும் தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா அவர் நினைத்த திசையில் நினைத்த நேரத்தில் அடிக்க முடியாமல் தடுமாறினார். கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்க போய் தப்பித்த அவர் சில பவுண்டரி மற்றும் சிக்ஸர்களால் ஒருவழியாக அரைசதத்தை எட்டினார்.

போட்டி முடிவுக்குப் பிறகு பேசிய ரோகித் சர்மா ” நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள் என்று கணிப்பு இருக்கும் ஆட்டத்தில் உங்கள் மீது அழுத்தம் நிறைய இருக்கும். எங்களுக்கு இது சரியான ஒரு விளையாட்டாக இருந்தது. தொடக்கத்தில் நாங்கள் சிரமப்பட்டோம் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் ஆரம்பத்தில் விக்கெட் மெதுவாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் எங்களால் ஷாட்களை சரியாக விளையாட முடியவில்லை. பின்பு நாங்கள் சரியான நிலையில் இருந்தோம்” என்று கூறினார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா ” நான் விளையாடிய விதத்தில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. என்னுடையது ஒரு சரியான நாக் என்று சொல்ல முடியாது. என்னால் சில ரன்கள் வந்தது நல்ல விஷயம் தான். ரன் வந்த விதம் அழகாக இருக்கிறதோ இல்லை அசிங்கமாக இருக்கிறது ஆனால் ரன் வந்தது நமது நம்பிக்கையை அதிகரிக்கும் என்பதுதான் முக்கியம் ” என்று கூறியிருக்கிறார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற சூர்யகுமார் யாதவ் பேசும்பொழுது ” நான் இந்த ஆட்டத்தில் என்னை வெளிப்படுத்த விரும்பினேன். நான் பேட்டிங் செய்ய சென்ற பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்பது மிகத் தெளிவாக இருந்தது. ஒரு ஓவருக்கு 8 முதல் 10 ரன்களை நான் எடுத்தாக வேண்டும் என்கிற செய்தி வெளிப்படையாக இருந்தது. அதை நான் செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.