அவரை பெருமைப்படுத்தியது நிச்சயமாக எனக்கு ஒரு சிறப்பான உணர்வு! – சுப்மன் கில் நெகிழ்ச்சியான பேட்டி!

0
474

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி பரபரப்பான ஆட்டமாக முடிவடைந்தது . இந்திய அணி 349 ரன்கள் எடுத்திருந்த போதும் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடிய வெற்றி பெற வேண்டி இருந்தது .

இந்தப் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அபாரமாக அடி இரட்டை சதம் அடித்தார் . இந்த இரட்டை சதத்தின் மூலம் மிகவும் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற இசான் கிசானின் சாதனையை முறியடித்தார் கில்.148 பந்துகளில் 208 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் அவர் . இதில் 19 பௌண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும்.

- Advertisement -

இந்தப் போட்டியின் முடிவிற்கு பின்னர் பேசிய கில் ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் அடுத்தடுத்து சிக்ஸர்களாக அடித்த பின்பு தான் 200 ரண்களை எட்டலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது . நான் 45 ஆவது ஓவரிலிருந்து அடித்து ஆடலாம் என நினைத்தேன் . அந்த நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழந்ததால் கடைசி மூன்று அவர்களின் அதிரடியாக ஆடிக் கொள்ளலாம் என அணி நிர்வாகம் அறிவுறுத்தியது எனக் கூறினார் .

மேலும் இதனைப் பற்றி தொடர்ந்து பேசிய அவர் இறுதிக்கட்ட ஓவர்களில் தொடர்ச்சியாக சிக்ஸர்களை அடித்தது ஒரு அலாதியான அனுபவம் எனக் குறிப்பிட்டார் . போட்டியின் 48வது ஓவரில் பெர்குசன் வீசிய முதல் மூன்று பந்துகளை சிக்ஸருக்கு விரட்டி தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் கில் .

சதம் பூர்த்தி செய்ததிலிருந்து அதிரடியாக ஆடத்தான் எண்ணினேன் ஆனால் மருமுனையில் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழுந்து கொண்டு இருந்ததால் இறுதி வரை நின்றாட வேண்டிய சூழல் உருவானது அதற்கு தகுந்தார் போல் எனது ஆட்டத்தை அமைத்துக் கொண்டேன் எனக் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் எனது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் என்னுடைய தந்தை தான் எனக்கு பயிற்சியாளர். இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை என்னுடைய குருவாக பார்க்கிறேன். லாக் டவுன் நாட்களில் அவர் எனக்கு மிகவும் உதவினார் . என்னுடைய பேட்டிங் நுட்பங்களில் கவனம் செலுத்தி என்னுடைய ஆட்டம் சிறப்பாக வர முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங் . அவரை நான் குருவாக பார்க்கிறேன் எனக் கூறினார் கில் .

மேலும் இந்த சாதனையின் மூலம் எனது குருவான யுவராஜ் சிங்கை பெருமை பெற செய்திருக்கிறேன். அவர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தார். அவரை மகிழ்ச்சி அடையச் செய்தது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது என கூறி முடித்தார் கில்.

2020 மற்றும் 21 ஆம் ஆண்டின் லாக் டவுனின் போது சுப்மன் கில்,யுவராஜ் சிங் உடன் இணைந்து பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது அப்போது யுவராஜ் சிங் எதிர்காலத்தில் இவர் இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என்று கூறியிருந்தார். தற்போது தன்னுடைய குருவின் வார்த்தைகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் கில்.