“கேப்டனா இருந்து இதை வெளியில பேசறதுக்கு ஒரு தனி தைரியம் வேணும்!” – ரோகித்துக்கு சேவாக் பாராட்டு!

0
5327
Rohit

இந்திய அணியில் மொத்த பேட்ஸ்மேன்களும் திணறிக் கொண்டிருந்த நேரத்தில் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் இருவர் மட்டுமே அணிக்கு ரன்கள் அடித்தவர்களாக இருந்தார்கள்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு பேட்ஸ்மேன்களாக வந்து பாமில் இணைந்து கொள்ள இந்திய அணி தற்பொழுது அபாயகரமான அணியாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இந்திய கேப்டன் ரோகித் சர்மா முன் நின்று அதிரடி தாக்குதல் பேட்டி விளையாட பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் மூலம் அணிக்கு அதிரடியான துவக்கத்தை தருவது அவருடைய வேலையாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக அவர் விக்கெட்டை இழப்பதை பற்றி கவலைப்படுவதில்லை. அவர் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுப்பதை பற்றி மட்டுமே யோசிக்கிறார். இது குறித்து நேற்று அவர் ஆட்டநாயகன் விருது பெற்றபோது தெளிவாகவே பேசி இருந்தார். மேலும் தனிப்பட்ட சாதனைகளுக்காக தான் ஒருபோதும் பார்ப்பது கிடையாது என்றும் கூறியிருந்தார்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “அவரது சாதனைகளைப் பற்றி என்ன சொல்வது. அவர் ஒவ்வொரு சாதனைகளையும் முறியடித்துக் கொண்டே வருகிறார். அவர் மூன்று இரட்டை சதங்களை அடித்த பொழுதும் தன்னுடைய பேட்டிங்கை ரசித்ததாகவே கூறினார்.

- Advertisement -

தான் முன்னின்று அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்களை எடுத்து துவக்கம் தருவது தன் பொறுப்பு என்று கூறி இருக்கிறார். இதை கேப்டனாக இருந்து பொது இடத்தில் பேசுவதற்கு பெரிய தைரியம் வேண்டும். மேலும் 19 இன்னிங்ஸ்கள் விளையாடி உலக கோப்பையில் ஆயிரம் ரன்களை கடந்து இருக்கிறார்.

ரோகித் சர்மாவின் ஸ்பெஷாலிட்டி என்பது அவருடைய டைமிங். அவர் குறித்து நாம் யோசிக்கும் போதெல்லாம் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய பேட்டிங் டைம்தான்.

அவர் எப்பொழுதும் ஒரு முன்னின்று அதிரடியான கிரிக்கெட்டை விளையாட விருப்பம் உள்ளவராகவே இருக்கிறார். மேலும் அதைத் தானே செய்ய வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். இதுதான் முக்கியமானது!” என்று கூறியிருக்கிறார்!