பல பரபரப்புகளுக்கு இடையே இந்தியாவில் நடந்து முடிந்திருக்கும் 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், அதன் முடிவில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக இல்லாமல் அமைந்திருக்கிறது.
இறுதி போட்டிகள் ஆஸ்திரேலியா அணியை சந்தித்த இந்திய அணி, லீக் சுற்று முதல் 10 ஆட்டங்களில் எப்படி விளையாடுவது அதற்கு நேர்மாறாக விளையாடியது என்று கூறலாம். இதில் ரோகித் சர்மா மட்டுமே ஒரே மாதிரி விளையாடியவராக இருந்தார்.
இந்திய அணி முதல் நான்கு ஆட்டங்களை இரண்டாவது பேட்டிங் செய்து வென்ற பிறகு, அடுத்த ஆறு போட்டிகளை இரண்டாவதாக பந்து வீசி வென்றது. இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடரில் இது மிகச்சிறந்த அனுபவமாகவும் இருந்தது.
கடைசி ஆறு போட்டிகளில் இந்திய அணி பந்துவீசி வென்றதில் முகமது சமி மட்டும் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். மொத்தம் அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் 24 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவராக விருதை வென்றார்.
மேலும் இறுதிப் போட்டிக்கு முன்பு வரை முகமது சமி மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராகவே பந்து வீச்சுக்கு வந்தார். அவருக்கு முன்பாக பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் பந்துவீச்சில் இருந்தார்கள்.
சமி போன்ற ஒரு அபாயகரமான வேகப்பந்துவீச்சாளர் மூன்றாவதாக வரப்போகிறார் என்பதே, பூம்ரா மற்றும் சிராஜை எதிர்கொள்ளும் பொழுது பேட்ஸ்மேன்களுக்கு மனரீதியான பாதிப்பை உருவாக்கியதாக அமைந்தது. ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சமியை முதலில் ரோகித் சர்மா கொண்டு வந்தார். இதனால் சிராஜிக்கு பந்துவீச்சில் தாக்கம் இல்லாமல் போனது.
இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது “ஆஸ்திரேலியா பந்துவீச்சு தாக்குதல் குறித்து இந்திய வீரர்கள் சற்று பீதி அடைந்தனர். சமி இடதுகை வீரர்களுக்கு மிகச் சிறப்பாக பந்துவீசி இருக்கிறார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அவருக்கு எதிராக டிராவிஸ் ஹெட் தப்பினார். அதே நேரத்தில் சமி சில வைட் பந்துகளை வீசியதை நீங்கள் பார்த்தீர்கள். ஸ்விங் காரணமாக முதல் இரண்டு மூன்று ஓவர்களை சிராஜ் வீசி இருக்க வேண்டும்.
உளவியல் ரீதியாக சமிதான் மூன்றாவதாக வருவார் என்று தெரியும். எனவே பந்து கொஞ்சம் பழையது என்பதால், அவரால் அதை கட்டுப்படுத்துவது சரியாக இருக்கும். வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று அவருக்கு கொடுத்தது சரியில்லை. சிராஜ் புதிய பந்தில் வீசி ஏதும் நடக்கவில்லை என்றால் அவரிடம் போய் இருக்கலாம்!” என்று கூறி இருக்கிறார்!






