இந்த உலகக்கோப்பையில் என்னென்னமோ நடக்குது பயமாத்தான் இருக்கு ; மொயின் அலி ஓபன் டாக்!

0
886
Moeen ali

தற்போது நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளே மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. எந்த அணிகள் எந்த குழுவில் இடம்பெறும் என்று ரசிகர்களுக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது!

யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று மிகவும் பரபரப்பாக திருப்பங்களுடன் செல்வதற்கு மிக முக்கியக் காரணம், நமீபியா அணி இலங்கை அணியை வென்றதும், வெஸ்ட் இண்டீஸ் அணியை ஸ்காட்லாந்து அணி வென்றதும்தான்.

- Advertisement -

இதனால் பெரிய அணிகளான இலங்கை அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்கு நுழையுமா என்றும் நுழைந்தால் எந்த குழுவுக்குள் நுழைவார்கள் என்றும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது.

தற்பொழுது இலங்கை அணி முதல் ஆட்டத்தில் தோற்று இரண்டு ஆட்டங்களில் வென்று, ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள ஏ குழுவில் நுழைந்துள்ளது. இலங்கையின் குழுவில் இருந்த இன்னொரு அணியான நெதர்லாந்து இந்திய அணி இடம்பெற்றுள்ள பி குழுவில் நுழைந்துள்ளது.

அடுத்து நாளை நடைபெறும் இரண்டு தகுதி சுற்றுப் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து இரண்டு அணிகளும் மோதிக் கொள்கின்றன. இதில் ஸ்காட்லாந்து இல்லை ஜிம்பாப்வே இந்திய அணியின் குழுவில் இடம் பெற அதிக வாய்ப்பு உண்டு. அதேசமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள குழுவிற்கு செல்லவே அதிக வாய்ப்பு உண்டு. இதனால் ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள ஏ குழு மரண குழுவாக மாறி உள்ளது.

- Advertisement -

நாளை மறுநாள் உலக கோப்பை தொடரின் பிரதான சுற்று நடக்க உள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இதே நாளில் நடைபெறும் இன்னொரு போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் மொயின் அலி தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதில் அவர் ” ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சனிக்கிழமை விளையாட உள்ள முதல் ஆட்டத்தை எளிமையாக எடுத்துக்கொள்ள முடியாது. நமீபியா அணி இலங்கை அணியையும், ஸ்காட்லாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியையும் வீழ்த்தி அதை நாம் முன்பே பார்த்தோம். இங்கு யார் வேண்டுமானாலும் யாரையும் தோற்கடிக்க முடியும். நாங்கள் எங்களது விளையாட்டில் சிறப்பாக இருக்க வேண்டும். போட்டி நாளில் நாம் நம்முடைய சிறந்ததை வெளிப்படுத்தவில்லை என்றால் இந்த வடிவத்தில் வெல்லவே முடியாது” என்று கூறியிருக்கிறார்…

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இதுபோன்ற ஒரு குறுகிய கிரிக்கெட் வடிவத்தில் நீங்கள் யாரையும் சிறிய அணி என்று ஒதுக்க முடியாது. கடந்த டி20 உலக கோப்பையில் நாங்கள் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பான முறையில் வீழ்த்தி நல்ல தொடக்கத்தைப் பெற்றோம். தற்போது நாங்கள் முதல் போட்டியில் விளையாட உள்ள ஆப்கானிஸ்தான் அணியில் விளையாடும் ரஷீத் கான் உலகத்தரமான வீரர். ஆப்கானிஸ்தான் அணியில் அவர்கள் வெற்றிக்குத் தேவையான மேட்ச் வின்னிங் வீரர்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களின் சிறந்ததை சனிக்கிழமை கொண்டு வருவார்கள்” என்று கூறியுள்ளார்.