“மேத்யூசை இப்படி அவுட் செய்தது கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது!” – சதம் அடித்த அசலங்கா அதிரடியான பேச்சு!

0
3418
Srilanka

இன்று உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லாத பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி டெல்லி மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு குசால் பெரேரா மற்றும் தனஞ்செயா இருவரும் சேர்க்கப்பட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கை அணிக்கு குசால் பெரேரா 4, குசால் மெண்டிஸ் 19, பதும் நிஷாங்கா 41, சதிரா 41 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து அனுபவ வீரர் அஞ்சலோ மேத்யூஸ் விளையாட வந்தார்.

இந்த நிலையில் உள்ளே வந்த அவர் இரண்டு நிமிடங்களுக்கு மேல் விளையாட நேரம் எடுத்த காரணத்தினால், பங்களாதேஷ் கேப்டன் நடுவர்களிடம் முறையிட அவர் டைம் அவுட் முறையில் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய சரித் அசலங்கா 105 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து வந்த தனஞ்செயா 34, தீக்ஷனா 22 ரன்கள் எடுக்க 49.3 ஓவரில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

ஆட்டத்தின் முதல் பகுதி முடிந்து பேசிய சரித் அசலங்கா கூறும்பொழுது “சதம் அடிப்பது என்பது எப்பொழுதும் நல்ல உணர்வுதான். நான் இப்பொழுது மகிழ்ச்சியாக உணர்கிறேன். டைம் அவுட் முறையில் மேத்யூஸ் வெளியேற்றப்பட்டது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது.

அதன் பிறகு தனஞ்செயா வர நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அவருடன் இணைந்து விளையாட நான் எப்பொழுதும் விரும்புவேன். அவர் கொஞ்சம் வேகமாக ரன்கள் கொண்டு வருவார். மேலும் நாங்கள் இருவரும் இடது வலது கை காம்பினேஷன் அமைக்கிறோம். இந்த ஆடுகளத்தில் 300 ரன்கள் தாண்டி எடுக்க நினைத்திருந்தேன். ஆனால் நான் இறுதியில் ஆட்டம் இழந்ததால் அது முடியவில்லை. ஆனால் இந்த ரன்களே போதும் என்று நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!