“இவ்வளவு நெருங்கி வந்து தோத்ததுதான் ரொம்ப வலிக்குது.. ரச்சின் கலக்கிட்டார்!” – டாம் லாதம் தோல்விக்கு பின் பேச்சு!

0
661
Latham

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் ரசிகர்களுக்கு முதல் முறையாக ஒரு ஹை ஸ்கோரிங் திரில்லர் கிடைத்து இருக்கிறது.

இதுவரை இந்த உலகக்கோப்பையில் நேற்றுதான் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளிடையே முதல் முறையாக நெருக்கமான போட்டி ஒன்று அமைந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்த நாளே இன்று கடைசி ஓவரின் கடைசி பந்து வரை நியூசிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி நீடித்தது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த இரண்டு போட்டிகளுமே அடுத்தடுத்து விருந்தாக அமைந்திருக்கிறது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் வார்னர் இருவரும் ஆரம்பம் முதலே தாக்குதல் பாணியில் விளையாடி நியூசிலாந்து அணியை முடக்கி விட்டனர்.

ஆனால் நியூசிலாந்து பிற்பகுதி ஆட்டத்தில் திரும்ப வந்து ஆஸ்திரேலியா அணியை நானூறு ரன்கள் எட்ட விடாமல் சிறப்பாக தடுத்தது.

- Advertisement -

மேலும் பேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அசாதாரணமான போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்தது. ரச்சின் ரவீந்திர மிகச் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி சதம் அடித்தார். கடைசி 10 வரை நீடித்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியால் 388 ரன்கள் குவித்தும் ஐந்து ரன் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

தோல்விக்கு பின் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறும் பொழுது “இது கிரிக்கெட்டில் மிகவும் அருமையான ஒரு போட்டி. இவ்வளவு நெருக்கமாக வந்து தோற்றது வலிக்கிறது. ஆஸ்திரேலியா தொடக்க முதலே சிறப்பாக விளையாடிய எங்களை போட்டியில் பின்னுக்கு தள்ளி விட்டார்கள்.

பிலிப்ஸ் மிக முக்கியமான நேரத்தில் 10 ஓவர்கள் முழுமையாக வீசி விக்கெட்டுகள் கைப்பற்றி 30 ரன்கள் மட்டும் கொடுத்து சிறப்பாக பங்களிப்பை தந்தது முக்கியமான ஒன்றாக இருந்தது.

கிட்டத்தட்ட 400 ரன்களை துரத்தும் பொழுது நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். எங்களுடைய துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கத்தை தந்தார்கள். ரச்சின் அசாதாரணமான ஆட்டம் ஒன்றை ஆடினார். தரம்சாலா உண்மையில் விளையாடுவதற்கு மிகவும் நல்ல இடம்” என்று கூறி இருக்கிறார்!