இந்தியாவில் இந்த ஆண்டு கோடை காலம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடக்க இருப்பதால், 17ஆவது ஐபிஎல் சீசன் அட்டவணை அறிவிப்பது தாமதமாக்கிக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் தொடரை ஆரம்பித்த ஆக வேண்டிய சூழலில், அட்டவணையை இரண்டு பகுதிகளாக அறிவிப்பதற்கு பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாதி அட்டவணையை அறிவித்து, பின்பு இரண்டாம் பாதி அட்டவணையை, அரசு தேர்தலுக்கான நாட்களை அறிவித்த பின்பு அதற்கேற்றபடி அமைத்து அறிவிக்கலாம் என முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், தேர்தல் காலம் என்பதால் பாதுகாப்பு காரணத்தை கூறி ஐபிஎல் தொடரை இந்தியாவை விட்டு வெளியே அனுப்பாமல் இருக்கிறார்கள்.
இதன் காரணமாக 10 மைதானங்களில் போட்டி நடைபெறும். மேலும் இந்திய ரசிகர்கள் பார்ப்பதற்கான நேரத்தில் நடத்தப்படும். மேலும் நிறைய ரசிகர்கள் நேரில் சென்று பார்ப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.
ஐக்கிய அரபு எமிரேடில் நடத்தப்படுகின்ற பொழுது பெரும்பாலும் டாஸ் வெற்றி தோல்வியில் முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக துபாயில் டாஸ்தான் எல்லாமே. எனவே தொடரில் பெரிய சுவாரசியம் இல்லாமல் போய்விடும். தற்பொழுது இந்த ஆபத்து ஐபிஎல் தொடருக்கு ஏற்படவில்லை.
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் அடுத்து வருகின்ற மார்ச் மாதம் 22 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. இந்த தேதியில் எந்த மாற்றமும் இருக்காது என்று அதிகாரப்பூர்வமான சில முக்கிய இணையதளங்கள் தெரிவித்திருக்கின்றன.
மேலும் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் ஸ்டார்ஸ் போர்ட்ஸ் சேனலில் இன்று மாலை 5 மணிக்கு ஐபிஎல் தொடரின் முதல் பகுதி அட்டவணை வெளியிடப்படுகிறது.
இதையும் படிங்க : ஸ்ரேயாசை சிக்க வைத்த என்சிஏ.. கடுப்பான பிசிசிஐ.. ஜெய் ஷா பேச்சுக்கு மதிப்பில்லையா?
மேலும் முதல் போட்டியில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிவுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத இருப்பதாக நம்பிக்கை கூறிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.