பாகிஸ்தான் டி20 லீக் பிஎஸ்எல் தொடரின் இறுதிப் போட்டியில் முகமது ரிஸ்வான் கேப்டனாக இருக்கும் முல்தான் சுல்தான் அணியும் சதப்கான் கேப்டனாக இருக்கும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும் இறுதிப் போட்டியில் மோதின.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற முல்தான் சுல்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஒரு துவக்க ஆட்டக்காரர் யாசிர் 6 ரன்கள் எடுக்க, மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் கேப்டன் முகமது ரிஸ்வான் 26 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து பேட்டிங் வரிசையில் நான்காவதாக வந்த உஸ்மான் கான் 40 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 57 ரன்கள் எடுத்தார். முல்தான் சுல்தான் அணி ஒரு கட்டத்தில் 17 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டும் எடுத்து நெருக்கடியில் இருந்தது. இந்த நிலையில் ஒரு விக்கெட்டை வைத்துக் கொண்டு இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி, 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 32 ரன்கள் எடுத்தார்.
முல்தான் சுல்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தரப்பில் இடதுகை சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் இமாத்துவாசிம் 4 ஓவர்களுக்கு 23 ரன்கள் 5 ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 13 பந்தில் 17 ரன்கள், இன்னொரு துவக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 32 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். ஆஹா சல்மான் 10 கேப்டன் சதாப் கான் 4 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து விக்கெட் கீப்பர் அசாம் கான் 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். சுலபமான வெற்றி கையில் இருக்க ஹைதர் அலி 5, பாகிம் அஷ்ரப் 1 என வெளியேறினார்கள். இதற்கு அடுத்து நசீம் ஷா வந்து அதிரடி காட்ட கடைசி ஓவரில் எட்டு ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.
இந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் கிடைத்தது. இதற்கு அடுத்து வெற்றிக்கு 2 பந்தில் ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் 17 ரன்கள் எடுத்திருந்த நசீம் ஷா ஐந்தாவது பந்தில் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து 1 பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில், நசீம் ஷா தம்பி ஹூனைன் ஷா விளையாட வந்தார். கடைசிப் பந்தை அவர் தட்டு தடுமாறி வெளியில் தட்ட, பின்பக்கமாக சென்ற பந்தை உள்வட்டத்தில் நின்ற ஃபீல்டர் தடுக்க முடியாமல் போக, பரபரப்பான இந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை இழந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முல்தான் சுல்தான் அணியை வென்று பிஎஸ்எல் 9வது சீசனின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதையும் படிங்க : துருவ் ஜுரல் சர்ப்ராஸ் கானுக்கு பிசிசிஐ சம்பள பட்டியலில் இடம்.. எவ்வளவு தெரியுமா?
இஸ்லாமாபாத் பந்துவீச்சில் கலக்கிய ஆல் ரவுண்டர் இமாத் வாசிம் இறுதிவரை களத்தில் நின்று 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிய உதவியாக இருந்தார். வெற்றி பெற்ற பின் நசீம் ஷா தம்பி ஆட்ட பரபரப்பை தாங்க முடியாமல் மைதானத்தில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார். மொத்தத்தில் ட
பிஎஸ்எல் 9வது சீசன் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது