துருவ் ஜுரல் சர்ப்ராஸ் கானுக்கு பிசிசிஐ சம்பள பட்டியலில் இடம்.. எவ்வளவு தெரியுமா?

0
471
Juerl

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நான்கு பிரிவுகளின் கீழ் சம்பளம் வழங்குகிறது. ஏ+ கிரேடு, ஏ கிரேடு, சி கிரேடு மற்றும் சி கிரேடு என பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கிரேடுகளில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஏழு கோடி, ஐந்து கோடி, மூன்று கோடி, ஒரு கோடி என சம்பளம் வழங்கப்படுகிறது.

மேலும் நான்காவது பிரிவான சி கிரேடுக்கு ஒரு வீரர் பத்து டி20 போட்டிகள், எட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிட்ட காலகட்டத்தில் விளையாடி இருந்தால், அவர் தாமாகவே சி கிரேடுக்கு சென்று விடுவார். இந்த பிரிவின் கீழ் அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும். சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான சம்பள பட்டியலை அறிவித்திருந்தது.

- Advertisement -

ஏ-பிளஸ் கிரேடு:

ரோஹித் சர்மா
விராட் கோலி
ஜஸ்பிரித் பும்ரா
ரவீந்திர ஜடேஜா

ஏ கிரேடு:

- Advertisement -

அஸ்வின்
முகமது ஷமி
முகமது சிராஜ்
கே.எல்.ராகுல்
ஷுப்மன் கில்
ஹர்திக் பாண்டியா

பி கிரேடு:

சூர்யகுமார் யாதவ்
ரிஷப் பந்த்
குல்தீப் யாதவ்
அகார் படேல்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

சி கிரேடு:

ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், சிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பாரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் படிதார்

இந்த நிலையில் தற்போது சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்ற காரணத்தினால், இவர்கள் தாமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சி கிரேடு சம்பளப் பிரிவுக்குள் செல்கிறார்கள். எனவே இவர்களுக்கு இந்த சம்பள ஆண்டின் இறுதியில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும்.

இவர்கள் இருவரும் தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சம்பள பட்டியலில் நுழைந்திருக்கிறார்கள் என்ற செய்தியை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இசான் கிஷான் இருவருக்கும் சம்பளப் பட்டியலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு மன்னிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : ஆஸி வீரர் காயம்.. உடனே அதிவேக இங்கிலாந்து வீரரை இறக்கிய மும்பை இந்தியன்ஸ்.. உடனடி நடவடிக்கை

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் சம்பள பட்டியலில் வாய்ப்பு மீண்டும் கொடுக்கப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேற்கொண்டு இவர்கள் உள்நாட்டுத் தொடர்களில் தவறாமல் கலந்து கொண்டு விளையாடுகிறார்களா? என்பதை பொறுத்து வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.