17 வயசுல நாங்க செஞ்ச அதை நினைத்தால்.. கோலியை ஸ்டார் அந்தஸ்தில் என்னால் பார்க்க முடியாது – இசாந்த் சர்மா பேட்டி

0
447

இந்திய டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக திகழும் இசாந்த் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் தனக்கும் விராட் கோலிக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து இஷாந்த் சர்மா சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி குறித்து இஷாந்த் ஷர்மா

இந்திய அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் இஷாந்த் சர்மா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 105 போட்டிகளில் விளையாடி 434 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் விராட் கோலியின் தலைமையில் இஷாந்த் சர்மா அதிக அளவு போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இவர்கள் இருவரும் அண்டர் 17 இந்திய அணியில் இருந்தே சிறந்த நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி ஒருமுறை இசாந்த் சர்மா குறித்து பேசும்போது, நான் அதிக அளவில் நட்போடு இருக்கும் நபர் என்றால் அது கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா மட்டுமே என்று கூறி இருக்கிறார். அவரோடு அதிக அளவு எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வேன் என அவர் கூறி இருக்கும் நிலையில் தற்போது இஷாந்த் சர்மா விராட் கோலி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பணத்தை எண்ணிப் பார்ப்போம்

இவர்கள் இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து இஷாந்த் பேசும்போது ” விராட் கோலியின் நட்சத்திர அந்தஸ்து வெளியாட்களுக்கானது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இருவரும் அண்டர் 17 போட்டிகளில் விளையாடியதில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எனவே அவரை அப்படி என்னால் அந்த கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. நாங்கள் அண்டர் 19 போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, என்பதை எண்ணிப் பார்த்து அதற்கு ஏற்றவாறு நாங்கள் சாப்பிட செல்வோம்.

இதையும் படிங்க:ஆர்சிபி பைனலுக்கு வந்தா.. கோலியோடு இதை நிச்சயம் செய்வேன்.. ஏபி டிவில்லியர்ஸ் உருக்கமான பேட்டி

அப்படி பார்க்கும்போது விராட் கோலி மற்றவர்களுக்கு வித்தியாசமானவர் என்றால் எனக்கு வேறு மாதிரியான நபர். கற்பனை செய்து பாருங்கள், உங்கள் சகோதரர் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார், அவரை அனைவரும் பாராட்டுகிறார்கள் இருப்பினும் நீங்கள் அவரை ஒரு மனிதராக பார்ப்பீர்கள். நாளின் இறுதியில் நீங்கள் அவரோடு உரையாடியது நேரம் செலவிட்டது என அனைத்தும் உங்கள் நினைவிற்கு வரும். நாங்கள் இருவரும் சந்திக்கும்போது எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடினோம் என்பது குறித்து பேசுவதில்லை. கிரிக்கெட்டுக்கு வெளியே நகைச்சுவையான விஷயங்கள் அனைத்தும் பேசுவோம்” என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -