ஆர்சிபி பைனலுக்கு வந்தா.. கோலியோடு இதை நிச்சயம் செய்வேன்.. ஏபி டிவில்லியர்ஸ் உருக்கமான பேட்டி

0
110

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னால் வீரரான ஏபி டிவிலியர்ஸ் இந்த ஆண்டில் பெங்களூர் அணியின் பங்களிப்பு குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சிறப்பான நிலையில் பெங்களூர்

நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதட்டம் காரணமாக 58 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள போட்டிகள் கைவிடப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையே என போர் பதட்டம் சீரான நிலையில் ஒரு வாரம் கழித்து மீண்டும் போட்டிகள் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றாலோ அல்லது போட்டி மழையால் நிறுத்தப்பட்டாலோ இரண்டு அணிகளுக்கும் கூடுதலாக ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டால் பெங்களூர் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சூழ்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் விராட் கோலியோடு ஐபிஎல் கோப்பையை ஏந்துவதற்கு உற்சாகமாக இருப்பதாக டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியோடு இதை செய்வேன்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “என் வார்த்தைகளை கவனியுங்கள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு வந்தால் நான் இறுதிப் போட்டியின் போது ஆர்சிபி வீரர்களுடன் மைதானத்தில் இருப்பேன். விராட் உடன் சேர்ந்து ஐபிஎல் கோப்பையை உயர்த்துவதை விட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சியை தராது. இதற்காக நாங்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து இருக்கிறோம்” என டிவில்லியர்ஸ் உருக்கமாக பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க:ஆல்டைம் சிறந்த ஐபிஎல் அணி.. ரோகித்தை வச்சு கோலி ஆர்சிபிக்கு கில்கிறிஸ்ட் செய்த அநியாயம்.. ரசிகர்கள் கொதிப்பு

இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில் அவரது ஓய்வை சிறப்பிப்பதற்காக பெங்களூர் வீரர்கள் இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதில் நிச்சயமாக உறுதியாக இருப்பார்கள்.

- Advertisement -