“இஷான் இந்த வயசுல இப்படித்தான் இருக்கும்.. ஆனா மாத்திக்கோ அப்பதான் நல்லது!” – அக்தர் வெளிப்படையான அறிவுரை!

0
461
Akthar

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக பத்து அணிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் முக்கியமான வீரராக இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இருந்தார்.

ஆனால் எந்த ஒரு கிரிக்கெட் ரசிகர்களும் விரும்பாத அளவுக்கு திடீரென டெங்கு காய்ச்சலில் சிக்கி அவரால் உலகக் கோப்பை தொடரில் தற்பொழுது விளையாட முடியாமல் இருக்கிறது. மேற்கொண்டு அவரால் நாளை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமில்லாமல், அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாட முடியாது என்றுதான் தெரிய வருகிறது.

- Advertisement -

கில்லுக்கு ஏற்பட்டு இருக்கும் உடல் நலக்குறைவு இந்திய கிரிக்கெட் அணியை ஓரளவுக்கு பாதிப்படையவே செய்திருக்கிறது. அடுத்த விராட் கோலி என்று பார்க்கப்படும் ஒரு வீரர் அணியில் விளையாடாமல் போனால் அந்த பாதிப்பு இருப்பதில் ஆச்சரியம் கிடையாது.

ஒரு ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் 1800 ரன்கள் மேலாக அடித்து சச்சின் டெண்டுல்கர் யாரும் நெருங்க முடியாத உலகச் சாதனையை படைத்திருந்தார். அதை உடைப்பதற்கான வாய்ப்புகள் கில்லுக்கு இருந்தது. ஆனால் தற்பொழுது இதற்கான வாய்ப்புகள் குறைந்து இருக்கிறது. இந்த வாய்ப்பு வேறு யாருக்கும் உலக கிரிக்கெட்டில் இனி அமையும் என்பதும் சந்தேகம்தான்.

கில் இல்லாத நிலையில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரராக உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்த இஷான் கிஷான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் களம் இறக்கப்பட்டார். அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே பெரிய ஷாட் விளையாடச் சென்று ஆட்டம் இழந்தார். இது இரண்டு ரன்கள் மூன்று விக்கெட்டுகள் என்று இந்திய அணியை கொண்டு விட்டது. அவருடைய அணுகுமுறை பலராலும் விமர்சனத்திற்கு உள்ளானது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் கூறும் பொழுது ” இஷான் கிஷான் பொறுமையாக இருக்க வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாட வேண்டும். இளமையின் ஆக்கிரமிப்பு மற்றும் உற்சாகம் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

மேலும் இசான் கிஷான் தனது அதிகாரத்தை முத்திரை குத்த விரும்புகிறார். அவர் தான் காட்சிக்கு வந்து விட்டதாக அறிவிக்க நினைக்கிறார். ஆனால் அவர் பொறுமையை காட்ட வேண்டும் அதுதான் முக்கியமானது!” என்று கூறியிருக்கிறார்!