இந்திய கிரிக்கெட்

என் மேல எனக்கே சந்தேகம் இருந்தது.. நான் அந்தக் கேள்வியை கேட்டுகிட்டேன்.. பதில் கிடைச்சிடுச்சு – இஷான் கிஷான் பேச்சு

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியை பத்தாவது ஓவருக்கு உள்ளாகவே உறுதி செய்தார். இந்த நிலையில் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பிறகு அவர் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி அரைசதம் அடித்து தன்னை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். இந்த போட்டியில் முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் வேகமாக விழுந்த நிலையில் அவருடைய ஆட்டம் இந்திய அணியை வெற்றி பெற வைத்தது முக்கியமாக இருக்கிறது.

இங்கு மனநிலைதான் முக்கியம்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள இஷான் கிஷான் கூறும் பொழுது “இன்று நான் என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே என்னுடைய முழு கவனமும் இருந்தது. இந்த போட்டிக்கு முன்பாக என்னுடைய மனநிலையும் நன்றாக இருந்தது. சில நேரங்களில் நாமே நம்முடைய பேட்டிங் நன்றாக இருக்கிறது என்று உணர்வோம். அந்த நேரத்தில் நம்முடைய மனநிலை தெளிவாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். நாம் பந்தை பார்த்து ஷாட் விளையாட வேண்டும்”

“இன்று ஆபத்தான முறையில் அக்ராஸ் ஷாட் விளையாட கூடாது என நாங்கள் முடிவு செய்தோம். அதே சமயத்தில் பவர் பிளேவில் ரன்கள் எடுக்க வேண்டியதும் முக்கியமானது. நீங்கள் இருநூறு ரன்னை தாண்டி துரத்தும் பொழுது பவர் பிளேவில் எடுக்கும் ரன்கள் மிகவும் முக்கியம். எனவே நாங்கள் அதற்கும் முக்கியத்துவம் கொடுத்தோம்”

- Advertisement -

எனக்கு சந்தேகம் இருந்தது

“உள்நாட்டு கிரிக்கெட் விளையாடி ரன்கள் எடுக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அது சில சமயங்களில் நமக்கானதாக இருக்கும். இந்திய அணிக்கு விளையாட உனக்கு தகுதி இருக்கிறதா உன்னால் ரன்கள் எடுக்க முடியுமா என்ற கேள்வி உள்ளுக்குள் வரும். அந்த நம்பிக்கையை பெறுவதற்காகத்தான் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி ரன்கள் எடுத்தேன்”

இதையும் படிங்க: நாங்க எல்லாருமே மேட்ச்ச முடிப்போம்.. 2 விக்கெட் போறது கவலையே இல்லை.. இதான் பிளான் – ஷிவம் துபே பேட்டி

“என்னிடம் ஒரு கேள்வி நானே கேட்டுக் கொண்டேன், என்னால் இதை செய்ய முடியுமா என்று. இன்று அதற்கான சரியான பதில் கிடைத்திருக்கிறது. நான் இன்னிங்ஸ் முழுமையாக விளையாடி நல்ல ஷாட் ஆட முடியும் என உணர்ந்தேன். நான் ரன்கள் எடுக்க வேண்டும் அதுவே என் சந்தேகங்களுக்கு பதிலாக இருக்கும் என்று நினைத்தேன். நான் அவுட் ஆனாலும் பரவாயில்லை நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதுதான் நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Ishan Kishan