நாங்க எல்லாருமே மேட்ச்ச முடிப்போம்.. 2 விக்கெட் போறது கவலையே இல்லை.. இதான் பிளான் – ஷிவம் துபே பேட்டி

0
302
Shivam

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறித்து இறுதிவரை ஆட்டம் விளகாமல் 18 பந்தில் 36 ரன்கள் எடுத்த சிவம் துபே பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு இஷான் கிஷான் 32 பந்தில் 76 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 37 பந்தில் 82 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 15 புள்ளி இரண்டு ஓவரில் 29 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

- Advertisement -

அது பெரிய விஷயம் இல்லை

இந்த போட்டி குறித்து பேசிய சிவம் துபே “இஷான் மற்றும் சூரியா பேட்டிங் மிகவும் அருமையாக இருந்தது. நிசான் விளையாடிய பேட்டிங் வேறு லெவலில் இருந்தது. எங்களுடைய டாப் 6 பேட்ஸ்மேன்களில் இருந்து நாங்கள் எதிர்பார்க்கும் ஒரு இன்னிங்ஸ் இதுதான். கடந்த போட்டியில் இதை அபிஷேக் செய்து கொடுத்தார். இந்த போட்டியில் இஷான் செய்திருக்கிறார்”

“நாங்கள் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட் இழந்த பொழுது பெரிதாக எதுவும் கவலைப்படவில்லை. இது ஒரு பெரிய விஷயமும் கிடையாது. எங்களுக்கு இந்த ஆடுகளம் எப்படி இருக்கும் என்று நன்றாக தெரியும். எங்களில் யாராலும் இந்த போட்டியை முடிக்க முடியும். எனவே நாங்கள் ரிலாக்ஸ் ஆகவே இருந்தோம்”

- Advertisement -

என் பந்துவீச்சு இதுதான்

“என்னுடைய பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை ரைட் லெப்ட் காம்பினேஷனை பொறுத்து அமையும். இஷான் மற்றும் சூரியா விளையாடிக் கொண்டிருந்த பொழுது இஷான் ஆட்டம் இழந்தார். எனவே ஹர்திக் பாண்டியாவுக்கு முன்பாக நான் வந்தேன். சூர்யா அவுட் ஆகி இருந்தால் ஹர்திக் வந்திருப்பார்”

இதையும் படிங்க : 208 ரன் 15 ஓவர்.. இந்தியா வரலாற்று சாதனை வெற்றி.. இஷான் சூரியகுமார் ருத்ர தாண்டவம்.. நியூசிலாந்து பரிதாப தோல்வி

“என் பந்துவீச்சு மூலமாகவும் அணிக்கு பங்களிப்பு செய்ய நான் விரும்புகிறேன். நான் வீசுவது ஒரு ஓவர் அல்லது இரண்டு ஓவர் என்பதை பற்றி பிரச்சினை கிடையாது. அது எனக்கும் அணிக்கும் மிகவும் முக்கியமான விஷயம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -