சொந்த மைதானத்தில் இஷான் கிஷான் சிக்ஸர் மழை – வீடியோ இணைப்பு!

0
423
Ishan Kishan

3 போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகர மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று இருந்தது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் கேஷவ் மஹராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். தென் ஆப்பிரிக்கா துவக்க வீரர்கள் ஏமாற்றம் தர, அதற்குப் பிறகு கரம் கோர்த்த ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் மார்க்ரம் ஜோடி 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. இருவரும் அரைசதம் தாண்டி ஆட்டம் இழந்தார்கள். இதற்கடுத்து களத்திற்கு வந்த டேவிட் மில்லர் 34 பந்துகளில் 36 ரன்கள் கடைசி கட்டத்தில் எடுக்க தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 278 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது குறிப்பாக முகமது சிராஜ் மிகச் சிறப்பாக பந்து வீசினார். 10 ஓவர்கள் வீசிய அவர் ஒரு மெய்டன் செய்து 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த ஆட்டத்திலும் துவக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். ஆனால் இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியது.

குறிப்பாக இஷான் கிசானின் ஆட்டத்தில் அனல் பறந்தது. இது அவரது சொந்த மாநில மைதானமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 60 பந்துகளில் அரை சதம் அடித்த அவர், அதற்கடுத்து தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சை சிக்ஸர்களால் நொறுக்கி தள்ளினார். சதம் அடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 பந்துகளில் 93 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் நான்கு பவுண்டரிகள் 7 இமாலய சிக்சர்கள் அடங்கும். இந்தக் கூட்டணி 161 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 48 பந்துகளில் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார். அவருடன் கடந்த ஆட்டத்தில் கலக்கிய சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறவே அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.

இசான் கிசான் தென்ஆப்பிரிக்க அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் அன்றிச் நோர்க்கியா பந்துவீச்சில் இமாலய சிக்சர்களை பறக்கவிட்டார். அதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!