இந்திய கிரிக்கெட்

அழுதுகிட்டே இருக்கிற குழந்தை இல்ல நீ.. எனக்கு ஹர்திக் பாண்டியா செஞ்சது பெரிய விஷயம் – இஷான் கிஷான் பேச்சு

நேற்று நபி அணிக்கு எதிராக இஷான் கிஷான் 24 பந்துகளுக்கு 61 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தன் கிரிக்கெட் வாழ்க்கையில் ஹர்திக் பாண்டியா எந்த அளவுக்கு உதவிகரமாக இருந்திருக்கிறார் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் திடீரென அபிஷேக்சர்மாவை தாண்டி இஷான் கிஷான் மிகவும் முக்கியமானவராக இந்திய அணிக்கு மாறியிருக்கிறார். புதிய தேர்வாளர்களால் திடீரென இந்திய டி20 அணிக்குள் வந்த அவர் ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மாற்றி இருக்கிறார்.

ஒரே ஒரு தொடர்

இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரில் அதிகரன் எடுத்தவராக வந்ததோடு ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையையும் இஷான் கிஷான் வென்றார். இதனால் தேர்வாளர்கள் பார்வை அவர் மீது விழுந்தது.

இதைத்தொடர்ந்து இந்திய அணிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டிருந்த அவருக்கு மறு வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்திக் கொண்ட இஷான் கிசான் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக விளையாடி சதமும் அடித்து ஒட்டுமொத்த பார்வையையும் தன் பக்கம் திருப்பி விட்டார். இந்திய அணிக்கு தேர்வாகாத காலகட்டம் தனக்கு மிக கடினமாக இருந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஹர்திக் முக்கியமானவர்

இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்பொழுது ” நான் பொதுவாக அமைதியாக இருக்கக்கூடிய ஆள் கிடையாது. நான் இந்திய அணிக்கு தேர்வாகாத காலகட்டத்தில் இது குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் நிறைய பேசியிருக்கிறேன். அப்போது அவர் இது குறித்து நீ யாரிடமாவது பேசிக்கொண்டு எதிர்மறையாக இருக்கப் போகிறாயா? இல்லை விஷயத்தில் கவனம் செலுத்த போகிறாயா? என்று கூறினார். நான் அங்கிருந்து என் விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். இன்று நான் நல்ல நிலைமையில் இருப்பதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : நான் கிரிக்கெட் விளையாட காரணமே தோனிதான்.. அவர்தான் திருப்புமுனையே – பாக் உஸ்மான் தாரிக் பேட்டி

இஷான் கிஷான் பற்றி ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது “நம்மை யாரும் கவனிக்கவில்லை என்றால் கூட நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அதுதான் நமக்கு பலன் கொடுக்கும். என்ன நடந்தாலும் நாம் அழுது கொண்டே இருக்கும் குழந்தையாக இருக்கக் கூடாது. காலையில் எழுந்து நாம் நம்முடைய வேலையில் கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by