தற்போது ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் இஷான் கிஷான் அதிரடியாக முதல் 10 இடங்களுக்குள் வந்து அசத்தியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட்டில் எந்த வடிவத்திலும் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ விரும்பவில்லை. ஆனால் திடீரென டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்த அவர் அசுர வேகத்தில் முன்னேறி வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
தற்போது ஐசிசி வெளியிட்டிருக்கும் டி20 பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 891 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார். நடப்பு டி20 உலக கோப்பையில் அவர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பட்டியலில் இந்திய வீரர் திலக் வர்மா 751 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். மேலும் கேப்டன் சூரியகுமார் யாதவ் 747 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் உள்ளார். இஷான் கிஷானோடு சேர்த்து மொத்தம் நான்கு வீரர்கள் முதல் 10 இடங்களில் இருப்பது இந்திய டி20 பேட்டிங் யூனிட்டின் பலத்தை காட்டுகிறது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இஷான் ந
கிஷான் 25வது இடத்தில் இருந்தார். தற்போது 17 இடங்கள் முன்னேறி 732 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியாவிடம் சரணடைந்த பாபர் விராட்டுக்கு சமமா?.. அபிஷேக் ஷர்மாவையே தொட முடியாது – தினேஷ் கார்த்திக் பேச்சு
ஐசிசி ரேங்க் பட்டியல் :
அபிஷேக் சர்மா – 891
பில் சால்ட் – 808
பத்தும் நிசாங்க – 786
திலக் வர்மா – 751
சாஹிப்சாதா ஃபர்ஹான் – 748
சூர்யகுமார் யாதவ் – 747
ஜோஸ் பட்லர் – 744
இஷான் கிஷன் – 732
டிம் சைய்பர்ட் – 721
டிராவிட் ஹெட் – 695