இந்தியாவிடம் சரணடைந்த பாபர் விராட்டுக்கு சமமா?.. அபிஷேக் ஷர்மாவையே தொட முடியாது – தினேஷ் கார்த்திக் பேச்சு

0
6
DK

இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பாகிஸ்தானின் பாபர் அசாமை இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி உடன் ஒப்பிடுவது மிகவும் தவறானது என கூறியிருக்கிறார்.

இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியில் பாபர் அசாம் மிகவும் மோசமான ஷாட் ஒன்றை விளையாடி அக்சர் படேல் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தற்போது இதை வைத்து தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சரிந்த பாபர் அசாம்

தற்போது பாபர் அசாம் பேட்டிங் டி20 கிரிக்கெட் வடிவத்தில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக மூன்று வடிவத்திலுமே சரிவை சில ஆண்டுகளாக சந்தித்து வருகிறது. அவர் நெடு நாட்களாக அரைசதமே இல்லாமல் மூன்று வடிவத்திலும் தடுமாறி வந்தார். இந்த நிலையில் அவரது பேட்டிங் தடுமாற்றம் டி20 கிரிக்கெட்டில் மிகவும் மோசமாக இருக்கிறது.

தற்போது மாறி உள்ள டி20 வடிவத்தில் வேகமாக விளையாட வேண்டிய கட்டாயம் எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் இருக்கிறது. இந்த நிலையில் பாபர் அசாம் டி20 கிரிக்கெட் என்று வரும் பொழுது ஒருநாள் கிரிக்கெட் போன்று கூட விளையாடுவதில்லை. இது பாகிஸ்தான் அணிக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கி வருகிறது.

- Advertisement -

இது நியாயம் கிடையாது

இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” நீண்ட காலமாக விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இடையே ஒப்பீடு நடந்து வருகிறது. ஆனால் கொஞ்சமும் நியாயம் இல்லை என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி பாபர் அசாம் போல இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அப்படி ஒரு ஷாட்டை எடுத்ததும் விளையாடுவார் என்று நான் கற்பனை கூட செய்ய மாட்டேன். அது எதிரணியிடம் சரண் அடைந்தது போன்ற ஒரு ஷாட்”

இதையும் படிங்க : அபிஷேக்க பிளான் பண்ணி.. எதிர் டீம் சீக்கிரம் அவுட் பண்ணா சந்தோசம்.. காரணம் இதுதான் – இந்திய பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

“உங்களால் இந்த இலக்கை துரத்தி அணியை வெற்றி பெற வைக்க முடியாது என்கின்ற அவநம்பிக்கை, இல்லையென்றால் எப்படி இந்த இலக்கை துரத்தி வெற்றி பெற வைப்பது என்று தெரியாததாலும் அப்படி ஒரு ஷாட் அவர் விளையாடி ஆட்டம் இழந்தார். ஆனால் இலக்கை துரத்துவதில் விராட் கோலி மிகச் சிறந்தவர். அவருடன் இவரை ஒப்பிடவே முடியாது. மேலும் தற்போது டி20 கிரிக்கெட் என்று எடுத்துக் கொண்டால் அபிஷேக் சர்மாதான் தலைசிறந்த வீரர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -