“டிக்ளர் பண்ணது இஷான் கிஷான வெறுப்பாக்கி இருக்கும்” – டிக்ளர் காரணத்தை சொன்ன ரோகித் சர்மா!

0
10319
Rohitsharma

எதிர்பார்த்தபடியே இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெகு எளிதாக 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை 150 ரன்களுக்கு சுருட்டினார்.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா சதம் எடுத்துக் கொடுக்க, மற்றொரு துவக்க ஆட்டக்காரராக வந்த அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 171 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. மீண்டும் விளையாட வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை ஏழு விக்கெட்டுகள் கைப்பற்றி அஸ்வின் 13 ரன்களுக்கு சுருட்டினார். இதனால் இந்தியா அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் செய்த பொழுது விராட் கோலி ஐந்தாவது விக்கட்டுக்கு வெளியேற இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷான் விளையாட வந்தார். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் அவர் முதல் 19 பந்துகளில் ரன் எடுக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் டக் அவுட்டுக்கு வந்த கேப்டன் ரோஹித் சர்மா அங்கிருந்தபடி ஏதோ சைகை காட்டி கொஞ்சம் கோபமாக சொல்ல, அடுத்து உடனே இஷான் கிஷான் ஒரு ரன் எடுத்து, தனது சர்வதேச டெஸ்ட் முதல் ரன்னை பெற்றுக் கொண்டார். இதற்கு அடுத்து உடனடியாக கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளேர் செய்தார்.

தற்பொழுது இது குறித்து கூறியுள்ள கேப்டன் ரோஹித் சர்மா ” டிக்ளேர் செய்வதற்கு முன்னால் களத்தில் இருந்த ஜடேஜா மற்றும் இஷான் கிஷான் இடம் ஒரு ஓவர் மட்டுமே இருக்கிறது என்பதை சொல்லிக் கொண்டிருந்தேன்.

இஷான் கிஷான் தனது முதல் ரன்னை அடிக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதற்குப் பின்னால்தான் டிக்ளர் செய்ய முடியும். எனவே இதை நான் அவரிடம் சொன்னேன்.

இஷான் கிஷான் பேட்டிங் செய்ய மிகவும் ஆர்வமாக இருந்து வந்தார். இதை நான் எப்பொழுதும் பார்த்து வருகிறேன். இந்த நிலையில் நான் டிக்ளர் செய்தது அவரை வெறுப்படைய வைத்திருக்கும்!” என்று கூறி இருக்கிறார்.

இந்த டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத்தை வெளியில் வைத்து இஷான் கிஷானுக்கு தரப்பட்ட வாய்ப்பில் அவர் கீப்பராக சரியாகவே செயல்பட்டு இருந்தார். நேற்று பேட்டிங்கிலும் அவருடைய டிஃபன்ஸிங் நன்றாகவே இருந்தது. ரிஷப் பண்ட் வந்தாலும் அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் தொடர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.