உள்நாட்டில் மோசமான சாதனையைப் படைத்த இசான் கிஷான்!

0
194
Ishan

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் முழுமையாக இழந்து, தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி உடன் விளையாடுகிறது!

இதன் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் இன்று தொடரை யாருக்கென்று நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்வதென தீர்மானித்தார். இந்தப் போட்டியிலும்
ப்ரித்வி ஷாக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சுப்மன் கில் மற்றும் இசான் கிஷான் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை ஆப் ஸ்பின் பந்துவீச்சாளர் பிரேஸ்வெல் வீச இந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷான் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இந்தத் தொடரில் முறையே அவர் 4, 19, 1 என 24 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதற்கு முன்பு இலங்கை அணிக்கு டி20 தொடரில் 37, 2, 1 என 40 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

- Advertisement -

இந்த மோசமான செயல்பாட்டின் மூலம் உள்நாட்டில் நடைபெற்ற டி20 தொடரில் மிகக் குறைவான ரன்கள் எடுத்த இந்திய துவக்க ஆட்டக்காரர் என்ற மோசமான சாதனையைப் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த மோசமான சாதனை 43 ரன்கள் எடுத்து ரோகித் சர்மாவிடம் இருந்தது. அதைக் கடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் முறியடித்த இசான் கிஷான் தற்பொழுது தனது மோசமான சாதனையை தானே முறியடித்து இருக்கிறார்!