உம்ரான் மாலிக்கின் எதிர்காலம் முடிந்து விட்டதா? அவரிடம் என்ன பிரச்சனை? லாரா பரபரப்பு தகவல்கள்!

0
431
Lara

நடப்பு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து நேற்று அதிகாரப்பூர்வமாக குஜராத் தனியுடன் தோற்றதும் வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!

இந்த ஐபிஎல் தொடரில் இளம் இந்திய வீரர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்து கொண்டிருக்கிறது. அதே சமயத்தில் பந்துவீச்சில் மிகப் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் வாய்ப்பை இழந்து இருப்பது வருத்தத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது!

- Advertisement -

டெல்லியில் வைத்து டெல்லி அணியுடன் கடந்த மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற போட்டியில்தான் உம்ரான் மாலிக் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் தரப்படவில்லை.

தற்போது இந்தியாவில் அதிவேக பந்துவீச்சாளர் என்றால் அது ஜம்மு காஷ்மீர் எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்தான். சர்வதேச இந்திய அணிக்காக விளையாடி வரும் ஒரு வீரருக்கு, ஐபிஎல் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது பெரிய கேள்வியாக இருந்தது.

குஜராத் அணிக்கு எதிராக நேற்று போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தில் மிகச்சிறந்த பந்துவீச்சு செயல்பாட்டை உம்ரான் மாலிக் வைத்திருக்கிறார். நேற்று அணியில் அவர் இடம்பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒதுக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இதெல்லாம் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் பிரையன் லாரா கூறும்பொழுது ” நீங்கள் ஒரு வீரரின் பார்மை பார்க்க வேண்டும். உம்ரான் மீது எங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. மேலும் டேல் ஸ்டைன் அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

ஆனால் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாட வேண்டும். அதற்கு நாங்கள் எங்களின் சிறந்த ப்ளேயிங் லெவனை வெளியிட வேண்டும். இப்போது இம்பேக்ட் பிளேயர் உடன் 12 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் நாம் வீரரின் பார்மை பார்க்க வேண்டும்.

எங்களிடம் 25 வீரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கார்த்திக் தியாகியை பற்றி கேட்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவருக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடுத்து அதற்குப் பிறகு தரப்படவில்லை.

தேர்வின் அடிப்படையில் என்னால் எதையும் தவறாக பார்க்க முடியவில்லை. இதை நான் ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். எங்கள் அணி களத்திற்கு சென்றது, ஆனால் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் செயல்படவில்லை!” என்று கூறியிருக்கிறார்!