ஆசியகோப்பைக்கு பிறகு, மீண்டும் எகிறும் விராட் கோலியின் மவுசு.. இது விராட் கோலி 2.0?? – புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது??

0
708

2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்று வரை சென்று வெளியேறியது. இது வருத்தம் அளித்தாலும், அதே தொடரில் இந்திய அணிக்கு கிடைத்த ஒரே நம்பிக்கை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி தனது முதல் சர்வதேச டி20 சத்தத்தை பூர்த்தி செய்தது தான்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு அவர் அடிக்கும் முதல் சர்வதேச சதம் இதுவாகும். அதன் பிறகு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் அடித்தார். பின் இந்தியாவில் இலங்கைக்கு எதிரான தொடரில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான சதத்தின் வறட்சியையும் பூர்த்தி செய்தார்.

- Advertisement -

அதன்பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியின் போது சதம் அடித்து அதிலும் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக நீடித்த சதம் வறட்சியையும் பூர்த்தி செய்தார்.

இவை மட்டுமல்லாது, ஆசியக்கோப்பை தொடர், டி20 உலககோப்பை தொடர், இலங்கை ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் என அனைத்திலும் விராட் கோலி தான் இந்திய அணிக்கு அதிக ஸ்கோரை அடித்திருக்கிறார்.

ஆசிய தொடருக்கு பிறகு ஐந்து சதங்கள் மற்றும் எட்டு அரைசதங்கள் உட்பட 38 போட்டிகளில் 1596 ரன்கள் அடித்திருக்கிறார். ஆசிய கோப்பைக்கு பிறகு உலகளவில் அதிக ரன்கள் அடித்தவராகவும் இவர் இருக்கிறார். ஆசியக்கோப்பைக்குப் பிறகு, இந்திய அணி 10 தொடர்கள் விளையாடியுள்ளது. அதில் ஐந்து தொடர்களில் விராட் கோலி அதிக ஸ்கோர் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை நடைபெறுகிறது. அதில் நம்பர் 3 இடத்தில் களமிறங்கும் விராட் கோலியின் பார்ம் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. அவர் இப்படி அசத்தி வருவது பலத்தை கொடுத்துள்ளது. இது விராட் கோலியின் 2.0 என்றும் அழைக்கப்பட்டு வருவது சரியா? என்பதை உலகக்கோப்பை முடிந்த பின்னர் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.