இதெல்லாம் ஒரு பிட்ச்சா? ஆஸ்திரேலியாவை விளாசிய ஐசிசி ; தண்டனை என்ன?

0
278
Icc

தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியவிற்கு தொடர் விளையாட சுற்றுப்பயணம் சமீபத்தில் செய்திருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் திரு அணிகளுக்கும் இது மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடராகும்!

இந்த நிலையில் பிரீஸ்பேன் கபா மைதானத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டி சர்ச்சைக்குரிய வகையில் மாறி இருக்கிறது. ஏனென்றால் இந்த டெஸ்ட் போட்டி முழுதாய் இரண்டு நாட்கள் முடிவடைவதற்குள் முடிந்ததுதான்!

- Advertisement -

இந்தப் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் பச்சைப்பசேல் என்று இருந்தது. பந்து மிக நன்றாக எகிறவும் செய்தது சுழலவும் செய்தது. இதனால் பேட்ஸ்மேன்களால் விளையாடவே முடியவில்லை. முதல் நாளில் 15 விக்கட்டுகளும் இரண்டாவது நாளில் 19 விக்கட்டுகளும் விழுந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது!

இந்தப் போட்டிக்கான ரெப்ரி ரிச்சி ரிச்சர்ட்சன் கூறும் பொழுது ” இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமானது ஆகும். பந்து நன்றாக எகிற செய்தது அதே சமயத்தில் வேகமாகவும் வந்தது. இரண்டாவது நாளில் சில நேரம் தாழ்வாகவும் சென்றது. இந்த காரணங்களால் இந்த ஆடுகளம் விளையாடுவதற்கு தகுதியானது அல்ல என்று நான் கருதுகிறேன் ” என்று கூறியுள்ளார்!

இந்தக் காரணத்தால் இந்த ஆஸ்திரேலியா ஆடுகளம் ஒரு டிமெரிட் புள்ளியைப் பெறுகிறது. ஒரு ஆடுகளம் 5 டிமெரிட் புள்ளிகளைப் பெற்றால் அடுத்த 12 மாதங்களுக்குப் போட்டியை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்த வருடத்தில் இரண்டு முறை இப்படி நடந்துள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்து பாகிஸ்தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி நடந்த ராவல்பிண்டி மைதானத்திற்கு இப்படி ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது!