இது தற்காலிகமா? நிரந்தரமா? டி20 அணியிலிருந்து ரோகித் சர்மா நீக்கம் பற்றி கசிந்த உண்மை!

0
664

டி20 அணியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது நிரந்தரமா? தற்காலிகமா? என்பது பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியாவிற்கு வரவிருக்கும் இலங்கை அணி ஜனவரி 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்கும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணி தனித்தனியாக வெளியிடப்பட்டது. டி20 அணியில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், புவனேஸ்வர் குமார் போன்ற மூத்த வீரர்கள் இடம்பெறவில்லை. இவர்களது நீக்கம் தற்காலிகமா? அல்லது நிரந்தரமா? என்பது பற்றிய தகவல்கள் பிசிசிஐ தரப்பிலிருந்து கசிந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு டி20 உலககோப்பை தொடரை கருத்தில் கொண்டு அணியை உருவாக்க பிசிசிஐ மற்றும் அதன் தேர்வுகுழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அணி டி20 தொடர்களில் பயணிக்க உள்ளது.

இந்த அணியில் முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று பிசிசிஐ மேல்மட்ட குழு கடந்த டிசம்பர் 21ஆம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறது. அதன் எதிரொலியாக இந்த மூத்த வீரர்களின் வெளியேற்றம் இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதற்கிடையில் வீரர்களின் பட்டியல் வெளியிடுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு விராட் கோலி அளித்த பேட்டியில், “இனி முழுக்க முழுக்க டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளேன்.” என தெரிவித்தார்.

இதில் மறைமுகமாக, இனி டி20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்றவாறு அவர் பேச்சு இருந்தது. இதை வைத்தே நம்மால் புரிந்து கொள்ள முடியும், இனி டி20 போட்டிகளில் விராட் கோலி இருக்க மாட்டார் என்று.

அதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவிற்கு இனி டி20 கேப்டன் பொறுப்பு தொடர்ச்சியாக கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது. இதிலிருந்து ரோகித் சர்மாவை நீங்களாகவே வெளியேறுங்கள் என பிசிசிஐ தெரிவிப்பது புரிந்து கொள்ள முடிகிறது.

2023 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் முழுமையாக பத்து மாத காலங்கள் கூட இல்லை. ரோஹித் சர்மாவின் முழு கவனம் ஒருநாள் போட்டிகளில் இருந்தால் போதுமானது என்ற முடிவுகளும் மேல்மட்ட குழுவின் சந்திப்பின்போது எடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்திருக்கிறது.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார் போன்ற மூத்த வீரர்களின் வெளியேற்றம் நிரந்தரமானது என புரிந்துகொள்ளலாம்.

அதேநேரம் நன்றாக செயல்பட்டு வரும் சுப்மன் கில், ருத்துராஜ் கேய்க்வாட், சிவம் மாவி, உம்ரான் மாலிக் போன்ற வீரர்களுக்கு இந்த இலங்கை தொடரில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி டி20 போட்டிகளின் எதிர்காலமாக இவர்கள் செயல்படுவார்கள் என்ற பேச்சுக்களும் அடிபடுகின்றன.