இந்தப் பையன்தான் அடுத்த தோனியா? கேள்விக்கு ஆமா என்ற சுரேஷ் ரெய்னா!

0
1592
Raina

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆயுஷ் பதோனி, மும்பை அணியின் நெகில் வதேரா, ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் ஆகிய இளம் வீரர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்து வருகிறார்கள்.

இவர்கள் தாண்டி பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா சிறப்பான அதிரடி பேட்டிங்கால் பிரட்லீ போன்ற வெளிநாட்டு வீரர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்!

- Advertisement -

கடந்த ஆண்டு யாரும் எதிர் பார்க்காத விதமாக பஞ்சாப் அணிக்கு சிறப்பான ஐபிஎல் சீசனை கொண்டிருந்த ஜிதேஷ் சர்மா, அதே பார்மை இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்கிறார்.

பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் மிடில் ஆர்டர் மற்றும் பினிஷிங்கில் எந்த இடத்தில் வந்தாலும் அவரது பங்களிப்பு அணிக்குத் தாக்கம் நிறைந்ததாக இருக்கிறது.

மேலும் இந்த ஆண்டு அவர் 11 போட்டிகளில் 260 ரன்களை 160 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளதுதான் மிகச் சிறப்பான விஷயம். அவர் அதிரடியாக விளையாடும் அதேசமயம் அவரது ஷாட் தேர்வுகள், விளையாடும் முறை மிகவும் ஒழுக்கமாகவும் இருக்கிறது என்று பாராட்டப்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனை செய்து வரும் சுரேஷ் ரெய்னாவிடம் ஜிதேஷ் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்பக் கூடியவராக இருப்பாரா? என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய சுரேஷ் ரெய்னா ” அவர் இதுவரை மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார். சில அற்புதமான கேமியோக்களை நிகழ்த்தி இருக்கிறார். அவர் ஒரு ஆக்ரோஷமான வீரர். அவர் ஏற்கனவே இந்திய அணியின் ஒரு அங்கமாக இடம்பெற்றும் இருந்தார்.

நீங்கள் கேட்பது போல் ஆம் அவர் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருக்க முடியும். மேலும் அவரது விக்கெட் கீப்பிங் நன்றாக உள்ளது. அவர் பேட்டிங் செய்யும் விதத்தில் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.

இந்தியத் தேர்வாளர்கள் அவரை மீண்டும் பார்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். அவரது பந்தை அடிக்கும் திறன் மிகச் சிறப்பாக இருக்கிறது. மேலும் எதிர்காலத்தில் நீங்கள் இன்னும் அவரிடம் இருந்து நிறைய பார்ப்பீர்கள்!” என்று கூறியிருக்கிறார்!