இது வேறயா!.. “அவார்டு கிடைச்சும் சந்தோஷப்பட முடியலைங்க” – இஷான் கிஷான் வருத்தமான விளக்கம்!

0
219
Ishan

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் தற்பொழுது டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை கைப்பற்றியுள்ளது. நாளை ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பிக்கிறது.

நேற்று தொடரை யாருக்கு என்று முடிவு செய்யும் தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாசை தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் இசான் கிஷான் இருவரும் அபாரமான துவக்கம் தந்தார்கள். மேலும் இருவரும் அரை சதம் அடித்தார்கள்.

- Advertisement -

இஷான் கிஷான் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்திருக்கிறார். மேலும் அவருக்கு டெஸ்ட் தொடரில் கடைசி மற்றும் இரண்டாவது போட்டியில் வழங்கப்பட்ட வாய்ப்பில் அரை சதம் அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக அவருக்கு இந்த தொடரில் இது நான்காவது தொடர்ச்சியான அரை சதமாக பதிவாகி இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா அணிக்கான இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்ற பெரிய கேள்வி இருந்தது. தற்பொழுது இந்த கேள்விக்கு இஷான் கிஷான் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்து பதில் அளித்து இருக்கிறார் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நடந்து முடிந்த ஒருநாள் தொடருக்கான தொடர் நாயகன் விருதை பெற்ற இசான் கிஷான் பேசுகையில்
“உண்மையில் நான் ஆட்டத்தை முடித்த விதத்தில் மகிழ்ச்சி அடையவில்லை. நாங்கள் விளையாடிய இந்த ஆடுகளத்தில் பெரிய ஸ்கோர் அடித்திருக்க வேண்டும். நான் பெரிய ஸ்கோர் செய்திருக்க வேண்டும். நான் பெரிய ரன்களை எடுக்க வேண்டும் என்று என்னுடைய மூத்த வீரர்களிடம் கூறியிருந்தேன். இதுதான் சாதாரண வீரர்களை பெரிய வீரர்களாக மாற்றுகிறது. அடுத்த முறை பெரிய ரன்னை எடுக்க முயற்சிப்பேன்.

- Advertisement -

மேலும் தொடர்ச்சியாக ரன் எடுப்பதும் முக்கியமானது என்று நினைக்கிறேன். கடந்த ஆட்டத்தில் எடுத்த ரன்னை மறந்து விட்டு பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். வருகின்ற பந்தை பார்த்து விளையாடி போட்டியை எடுக்க வேண்டும்.

கில் உடன் விளையாடுவது சிறப்பான ஒன்று. அவர் அற்புதமான வீரர். அவர் எல்லா பந்தையும் மிடில் செய்வது அபாரமானது. அவர் விளையாடுவதை நான் எதிர் முனையில் இருந்து பார்ப்பது என் நம்பிக்கையை அதிகரிக்கிறது.

மேலும் இந்த நிலையில் வெற்றி பெறுவது எப்பொழுதும் முக்கியமானது. நாங்கள் 350 என்ற பெரிய ரன்னை பெற்றவுடன், ஆரம்பத்தில் இருந்து விக்கட்டுகள் எடுக்க முயற்சி செய்தோம். ஆனால் விக்கட்டுகள் எடுப்பது அவ்வளவு சாதாரணமாக இல்லை.

இந்தக் குழுவிற்கு இடையேயான உரையாடல் மற்றும் குழுவில் உள்ள அனைவரும் பாசிட்டிவாக இருக்கிறார்கள். நான் இங்கு சில போட்டிகள் விளையாடி இருக்கிறேன். எனவே இங்குள்ள நிலைமைகள் எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியும். எனவே இங்கு நடைபெறும் அடுத்த டி20 உலகக் கோப்பை பற்றி நான் கவலைப்படவில்லை, யோசிக்கவில்லை. எங்களுக்கு அடுத்து சில முக்கியமான தொடர்கள் வர இருக்கின்றன. நிகழ்காலத்தில் இருப்பதுதான் முக்கியம்!” என்று கூறியிருக்கிறார்!