அவசியமான பரிசோதனையா இது.. 3 இளம் வீரர்களின் வாழ்க்கையில் விளையாடலாமா டிராவிட்?!

0
357
Dravid

அடுத்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது. நடக்க இருக்கும் அந்த உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. உலகக் கோப்பைக்கு முன்பாகவே விளையாடும் 20 அணிகளும் முடிவு செய்யப்பட்டு விட்டன. எனவே எல்லா அணிகளும் தங்களது தயாரிப்புகளில் ஈடுபடலாம்.

இந்த நிலையில் தற்பொழுது இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் இடம்பெறக்கூடிய வீரர்கள் யார் என்பது ஒரு பெரிய தலைவலியான விஷயமாக மாறி இருக்கிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் நிலை என்ன என்று தெரியாததால் இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாக இந்த உலகக் கோப்பையில் இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் கையில் இருக்கும் இளம் வீரர்களையும் பரிசோதனை முயற்சி என்ற பெயரில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவசியமற்ற முறையில் நடத்தி வருகிறது. எந்த வீரர்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு அதிகமோ, அந்த வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு தருவதின் மூலம், சர்வதேச அனுபவத்தை ஏற்படுத்தலாம். ஆனால் மாற்று வீரர்களுக்கும் பயிற்சி தருகிறேன் என்று டிராவிட் தலைமையிலான குழு தவறு செய்து வருகிறது.

ஜெய்ஸ்வால் கட்டாயம் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவார் என்பது உறுதி. ருத்ராஜ் ஆஸ்திரேலியா தொடரில் மற்றும் ஒரு துவக்க வீரராக தன்னை நிரூபித்திருக்கிறார். ஒருவேளை ரோகித் சர்மா வந்தால் இவரே மூன்றாவது துவக்க வீரராக இருப்பார். ஆனால் ருதுராஜை வெளியில் வைத்து சுப்மன் கில்லை பரிசோதிக்கிறார்கள். அவரை எப்படியும் மூன்று வடிவத்திலும் விளையாட வைக்கவே இப்படி செய்கிறார்கள் என்று ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் மூன்றாவது இடத்தில் திலக் வர்மா சிறந்த வீரராக இருக்கக் கூடியவர். மேலும் அவர் இடது கை வீரர் என்பதும் பகுதி நேர பந்துவீச்சாளர் என்பதும் சிறப்பான விஷயம். ஆனால் இவருக்கு மாற்று வீரர் என ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கொடுத்து, இவருக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்பையும் நிறுத்தி வைக்கிறார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கம் தற்பொழுது டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கும் இளம் வீரர் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பை நிறுத்தி, குல்தீப் யாதவுக்கு கொடுத்து வருகிறார்கள். இளம் வீரரான இவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கும் பொழுது, இவர் தன்னை மேலும் சரி செய்து கொள்ள முடியும்.

ஆனால் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விளையாட அதிக வாய்ப்பு இருக்கும் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு தராமல், அவர்களுக்கு யார் மாற்று வீரர்களாக வருவார்களோ அவர்களுக்கும் சேர்த்து வாய்ப்பு தந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இருக்கும் குறைந்த சர்வதேச டி20 போட்டிகளில், ருதுராஜ், திலக் வர்மா மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோருக்கு தேவையான அனுபவம் கிடைப்பதற்கு விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.