சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான நாளைய போட்டி மழையால் ரத்தாக வாய்ப்பா? – என்ன சொல்கிறது வானிலை அறிக்கை!

0
1373

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . 47 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக ஒவ்வொரு அணிகளும் மும்முறமாக போராடி வருகின்றன .

நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை தோற்கடித்தது . இனி வரும் ஒவ்வொரு போட்டிகளுமே எல்லா அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது .. அதிகமான அணிகள் ஒரே புள்ளிகளுடன் இருப்பதால் ரன் ரேட் விகிதமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது .

- Advertisement -

ஒவ்வொரு போட்டியின் வெற்றி மற்றும் தோல்வி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான அணியின் வாய்ப்புகளை பாதிக்கும் என்பதால் அனைத்து அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடி வருகின்றன . இந்நிலையில் நாளை மதியம் நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் பல புரட்சி நடத்த இருக்கின்றன .

புதன்கிழமை சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டி மழையின் காரணமாக தடைப்பட்டது . இந்தப் போட்டியில் சென்னை அணி லக்னோவை 126 ரன்களில் சுருட்டியது . ஆனால் எதிர்பாராத விதமாக இரண்டாவது பாதியில் மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது . இதன் மூலம் இரண்டு அணிகளுக்கும் ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன . தற்போது சென்னை அணி 11 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது .

மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது . நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறும் . அதனால் அந்த அணியை வெற்றி பெற கடுமையாக போராடும் . மேலும் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் 200க்கும் அதிகமான ரண்களை சேஸ் வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மறுபுறம் நாளை சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால் சென்னை அணி கடுமையாக போராடும் . மேலும் கடைசியாக நடைபெற்ற சென்னை போட்டியில் சிஎஸ்கே அணி பஞ்சாப் அணியுடன் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது . இதனை ஈடு செய்யும் வகையில் இந்த போட்டியில் வெற்றி பெறவும் முயற்சிக்கும் .

தற்போது தமிழக முழுவதும் கனமழை பெய்து வருவதால் இந்தப் போட்டிக்கு ஏதேனும் தடை ஏற்படுமா என ரசிகர்கள் மத்தியில் அச்சம் எழுந்திருக்கிறது . சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிஎஸ்கே அணியின் போட்டிக்கு மலையாள ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர் . நாளை போட்டியில் நடைபெற இருக்கும் நேரத்தில் சென்னையின் வானிலை பொறுத்த வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை வருவதற்கான வாய்ப்பு இருவது சதவீதம் மட்டுமே இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது