மீண்டும் இந்தியா பாகிஸ்தான் உலக கோப்பையில் மோத வாய்ப்பு இருக்கா?.. என்ன நடந்தால் இது நடக்கும்.. முழு விபரம்!

0
657
ICT

நேற்று தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற மிக பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வென்றிருக்கிறது.

இதன் மூலம் அரையிறுதிக்கான நான்கு அணிகளில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான ஒரு சிறிய ஜன்னல் திறந்திருக்கிறது. அதாவது பாகிஸ்தான் அணிக்கு ஒரு அரையிறுதி வாய்ப்பு இன்னும் மிச்சம் இருக்கிறது.

- Advertisement -

நியூசிலாந்து அணி தனது கடைசி மூன்று ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு பெரிய அணிகளை எதிர்த்து விளையாடி இருக்கிறது. மூன்றாவது அணியாக இலங்கை இருக்கிறது.

தற்பொழுது நியூசிலாந்து அணி ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்று 8 புள்ளிகள் உடன் இருக்கிறது. நியூசிலாந்து அணி மீதம் இருக்கும் மூன்று போட்டிகளில் மூன்றையும் தோற்றால் இதே 8 புள்ளி உடன் இருக்கும். ஒரு போட்டியை வென்றால் 10 புள்ளிக்கு வரும்.

அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி தனது கடைசி மூன்று ஆட்டங்களில் பங்களாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளையும் வென்றால் பாகிஸ்தான அணி 10 புள்ளிகளுக்கு வரும்.

- Advertisement -

நியூசிலாந்து அணி 10 புள்ளிகளில் இருக்கும் பொழுது ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் மேலே இருந்தால் அரை இறுதிக்கு நான்காவது அணியாக தகுதி பெறும். ஒருவேளை பாகிஸ்தான் மூன்று ஆட்டங்களையும் வென்று, நியூசிலாந்து 3 ஆட்டங்களையும் தோற்றால், புள்ளி அடிப்படையில் எளிதாக அரையிறுதிக்கு வரும். அப்பொழுதும் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திலே இருக்கும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு மிக அதிகபட்சமாக இருக்கிறது. எனவே பாகிஸ்தான் நான்காவது இடத்தை பிடிப்பதாக இருந்தால், அரை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் சூழல் உருவாகும். ஏனென்றால் புள்ளி பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் அணிகள்தான் அரையிறுதியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது!