விராட் கோலி அவுட் ஆன விதம் நியாயமானதா?.. இப்படி விளையாடலாமா? – தினேஷ் கார்த்திக் பளிச் பதில்!

0
165
Virat

தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அந்த நாட்டில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் முதல் போட்டி நேற்று தொடங்கியது. போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா ஜெய்ஸ்வால் கில் என முதல் மூன்று விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்துவிட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்து அவுட் வாய்ப்பிலிருந்து தப்பித்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி இருவரும் சேர்ந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மதிய உணவு இடைவேளைக்கு சென்று திரும்பி இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

ஸ்ரேயாஸ் ஐயர் ரபாடா பந்துவீச்சில் 33 ரன்களுக்கு கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து விராட் கோலி 38 ரன்களில், ரபாடா வீசிய உள்ளே வந்து திடீரென வெளியே சென்ற பந்தில் ஆட்டம் இழந்தார்.

விராட் கோலி ஆட்டம் இழந்த முறை குறித்து இந்திய அணியில் வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். அது குறிப்பிட்ட அந்தப் பந்து விளையாட கூடியதா? என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ரபாடாவுக்கு செஞ்சுரியன் மைதானம் நல்ல வேட்டைக் களமாக இருந்தது. அதேபோல் இதே மைதானத்தில் விராட் கோலியும் நல்ல வெற்றிகள் பெற்றிருக்கிறார். மேலும் இங்கு சதமும் அடித்து இருக்கிறார். இது சிறந்த வீரர்கள் சிறந்த வீரர்களுக்கு எதிராக மோதிக் கொள்வது. இது வெறும் டெக்னிக் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இது இருவருக்கும் இடையேயான மனப்போராட்டம் சார்ந்த விஷயமும் கூட.

விராட் கோலி மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். ரபாடாவின் முதல் ஸ்பெல்லை நன்றாக சமாளித்தார். அவர் ஆட்டம் இழக்கும் வரையிலும் அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். அந்தக் குறிப்பிட்ட பந்து உள்ளே வந்து வெளியே திரும்பியது. ஒரு பேட்ஸ்மேன் ஆக அப்பொழுது நீங்கள் விராட் கோலி விளையாடிய லைனுக்கு வந்து விளையாட மட்டும்தான் முடியும். அதற்கு மேல் எட்ஜ் எடுத்தால் உங்களால் எதுவும் செய்ய முடியாது!” என்று கூறி இருக்கிறார்!