“எல்லாம் இந்தியர்களுக்கு மட்டும் தானா”..?” – ஆஸ்திரேலிய அணியை கடுமையாக சாடிய கௌதம் கம்பீர்!

0
1176

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி 28ஆம் தேதி துவங்கி லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற்று வந்தது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 371 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து அணிக்கு எதிராக நிர்ணயித்தது. இதனைத் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 45 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தாலும் பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆனதால் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .

- Advertisement -

இதன் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட டிரஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்று இருக்கிறது . முன்னதாக இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ரன் அவுட் செய்யப்பட்ட விதம் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக பலரும் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் ஆப் த கேம் குறித்து கேள்வியை எழுப்பி இருக்கின்றனர் .

நேற்றைய போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பான ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது கேமரூன் கிரீன் வீசிய பந்தை பேர்ஸ்டோ எதிர்கொண்டார் . அந்தப் பந்தை அவர் விளையாடாமல் விக்கெட் கீப்பிரிடம் விட்டுவிட்டு தன்னுடைய கிரீஸில் இருந்து வெளியே வந்தபோது ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அவரை ரன் அவுட் செய்தார்.

ஆனால் ஜானி பேர்ஸ்டோ பந்து டெட் பால் ஆகிவிட்டது என்று நினைத்து கிரீஸில் இருந்து வெளியே வந்ததாக தெரிவித்தார் . இந்தத் தீர்ப்பு மூன்றாவது நடுவரிடம் முறையிடப்பட்டு அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்த ரன் அவுட் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக இருக்கிறது . நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்து ரசிகர்களும் இந்த ரன் அவுட் இருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் . ஆஸ்திரேலியா ஏமாற்று வேலைகளின் மூலம் வெற்றி பெறும் அணி எனவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர் .

- Advertisement -

இந்த ரன் அவுட் இருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர் . இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் ஆஸ்திரேலியா அணியை கடுமையாக விமர்சித்திருக்கிறார் . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக பதிவு செய்து இருக்கிறார் கௌதம் கம்பீர் .

இது பற்றி பதிவு செய்திருக்கும் கம்பீர் ” ஸ்பிரிட் ஆஃப் கேம் போன்றவை எல்லாம் இந்தியர்களுக்கு தானா? ஏய் ஸ்லெட்ஜர்ஸ் ! இப்படி செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என ஆஸ்திரேலியா அணியை மறைமுகமாக தாக்கி இருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது அந்த அணியின் வீரர் இயான் பெல் வந்து எல்லைக்கோட்டை தொட்டுவிட்டதாக நினைத்து கிரீஸ்க்கு வெளியே இருந்தார். அப்போது இந்திய வீரர்கள் அவரை ரன் அவுட் செய்தனர். இது தொடர்பாக இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய வீரர்களை கடுமையாக விமர்சித்தனர் . ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி மீண்டும் விளையாட வந்த போது இயான் பெல்லுக்கு எதிராக செய்த அப்பெயிலை திரும்ப பெற்றுக் கொண்டது இதனால் யான் பெல் மீண்டும் ஆட வந்தார். இந்திய அணியின் ஸ்பிரிட் ஆஃப் கேம் பற்றி அனைவரும் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது .