இது நோ-பால் இல்லையா? லக்னோ அணி மீது நட்டு போல்டை வீசிய ஹைதராபாத் ரசிகர்கள் – மைதானத்தில் பரபரப்பு!

0
375
Ipl2023

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன!

இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி தோற்றால் பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேற வேண்டும். லக்னோ தோற்றால் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு கடினமாகும்!

- Advertisement -

இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாசை வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்து களமிறங்கியது.

ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 7, அன்மோல்ப்ரீத் சிங் 36, ராகுல் திரிபாதி 20, மார்க்ரம் 28, கிளாஸன் 47, பிலிப்ஸ் 0, அப்துல் சமாத் 37, புவனேஸ்வர் குமார் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 181 ரன்கள் வந்தது.

இந்தப் போட்டியின் போது ஆட்டத்தின் 19ஆவது ஓவரை ஆவேஷ் கான் வீசினார். அப்துல் சமாத்துக்கு வீசிய ஒரு பந்து இடுப்பு உயரத்துக்கு மேல் ஃபுல் டாஸ் ஆக விழுந்தது. இதற்கு லெக் அம்பயர் நோ பால் கொடுத்தார்.

- Advertisement -

இதை அடுத்து லக்னோ அணி அப்பீலுக்கு போக மூன்றாவது நடுவர் நோ பால் இல்லையென அறிவித்தார். பேட்ஸ்மேன் கொஞ்சம் குனிந்து விளையாடியதால் நோ பால் இல்லை என்றார்.

இதற்கு களத்தில் இருந்த தென்னாபிரிக்க வீரர் கிளாசன் கடுமையான அதிருப்தி தெரிவித்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் திடீரென்று ஆட்டம் நிறுத்தப்பட்டது. கள நடுவர்கள் லக்னோ அணியினர் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை.

இப்போது ஜியோ சினிமா என்ன நடந்தது என்ற உண்மை காரணத்தை வெளியிட்டு இருக்கிறது. நோ பால் தராத காரணத்தால் ஆத்திரமடைந்த ஹைதராபாத் ரசிகர்கள், நட்டு போல்டை கொண்டு லக்னோ அணியினர் அமர்ந்த பக்கத்தை நோக்கி வீசி தாக்கி இருக்கின்றனர். இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது!