“இந்தியானா இளக்காரமா? இங்கிலீஷ் வர்ணனையாளர்களுக்கு இதே வேலையா போச்சு?” – தட்டிக் கேட்ட சுனில் கவாஸ்கர்!

0
326
Gavaskar

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான ஆசஸ் தொடர் தற்பொழுது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளில் மிக நெருக்கமான முறையில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரில் மிக வலிமையாக முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெல்வதற்கான மிக அதிகபட்ச வாய்ப்பில் தற்போது விளையாடிக் கொண்டு இருக்கிறது.

இந்தத் தொடரில் இங்கிலாந்து ரசிகர்களின் செயல்பாடு மிகவும் மோசமான முறையில் அமைந்திருக்கிறது என்றே கூறலாம். அவர்கள் ஆஸ்திரேலியா வீரர்களை குறிப்பாக ஸ்மித்தை குறி வைத்து தாக்கி வருகிறார்கள். மேலும் போட்டியை பார்க்க வந்து வெளியேறிய அவரது தாயாரிடம் ரசிகர்கள் தவறான முறையில் வம்பு வளர்த்ததாக கூறப்படுகிறது. இதற்காக தனிப்பட்ட முறையில் பாதுகாப்பை ஆஸ்திரேலியா கேட்டிருப்பதும் நடந்திருக்கிறது.

இப்படியான நிலையில் நடந்து கொண்டிருக்கும் ஆசஸ் தொடரில் தற்போதைய இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மிக அதிகபட்சமாக உள்நாட்டு இங்கிலாந்து அணியை ஆதரிப்பதாகவும், இது இந்திய ரசிகர்கள் செய்வதை போலவே இருப்பதாகவும், ஆங்கில கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பேசியிருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது இதற்கு சுனில் கவாஸ்கர் தன்னுடைய எதிர்வினையை மிகக் கடுமையான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் அவர் ஆங்கில ஊடகங்களையும் பென் ஸ்டோக்சை முன்வைத்து விளாசி தள்ளி இருக்கிறார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” மைதானத்தில் ரசிகர்கள் தங்கள் சொந்த அணியை ஆதரிப்பதும், எதிர் அணியை உற்சாகப்படுத்தாமல் இருப்பதும் இயல்பான ஒன்று. ஆனால் இது இந்தியாவில் மட்டுமே நடப்பது போன்று பேசுவது மிகவும் அபத்தமானது. இது இந்தியாவில் மட்டும் நடக்கும் நிகழ்வு கிடையாது.

ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போட்டிகளின் போது மைதானத்தில் ரசிகர்கள் அமைதியாக இருந்தால் அந்த அணி பந்துவீச்சாளரை எதிரணி பவுண்டரி அடித்திருக்கும், இல்லை அந்த அணியின் வீரர் ஆட்டம் இழந்து இருப்பார்.

தற்போதைய ஆசஸ் தொடரில்தான் இது மிக வெளிப்படையாகத் தெரிகிறது. வெளிநாட்டு வர்ணனையாளர்கள் இந்தியாவுக்கு வரும்பொழுது எல்லாம், இந்திய பந்துவீச்சாளர் பவுண்டரிக்கு அடிக்கப்பட்டாலோ, இந்திய பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தாலோ, உடனே மைதானமே அமைதியாக இருக்கிறது என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.

பொதுவாக லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஜானி பேர்ஸ்டோ ஸ்டெம்ப்பிங் செய்யப்பட்டது குறித்துதான் மிக அதிகமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்த பென் ஸ்டோக்ஸ்சை பற்றி பேசவே இல்லை. ஆனால் மிக முக்கியமாக அதைப் பற்றித்தான் அதிகம் பேசி இருக்க வேண்டும்!” என்று ஆங்கில ஊடகங்களையும் சாடி இருக்கிறார்!