விராட் ரோகித்துக்காக.. கிரிக்கெட்ல பிசிசிஐ இத தாராளமா மாத்தலாம்.. நல்லதுதான் நடக்கும் – இர்பான் பதான் வலியுறுத்தல்

0
33
Irfan

தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுவதால் அவர்களுக்காக பிசிசிஐ ஒரு முக்கிய விஷயத்தை செய்ய வேண்டும் என இர்பான் பதான் கூறி இருக்கிறார்.

சமீபத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் மிகச் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை வென்றார்கள். மேலும் இருவருமே சதம் அடித்திருந்தார்கள்.

- Advertisement -

அஸ்வின் கருத்து

தற்போது இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜய் ஹசாரே டிராபி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதற்கு முன்பாக டி20 தொடர் சையத் முஸ்தாக் அலி டிராபி நடைபெற்றது. ஆனால் டி20 தொடரை பார்க்க முடிந்த அளவுக்கு தன்னால் ஒருநாள் கிரிக்கெட் தொடரை பார்க்க முடியவில்லை என அஸ்வின் கூறி இருக்கிறார்.

அதே சமயத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்காக தலா இரண்டு போட்டிகளில் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார்கள். இந்த இரண்டு போட்டிக்கும் மக்கள் பெரிய அளவில் வந்து ஆதரவு கொடுத்தார்கள். இவர்களால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வரவேற்பை கொண்டு வர முடியும் என அஸ்வின் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது ஏன் முடியாது?

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார்கள். எனவே இவர்களுக்காக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர், முத்தரப்புத் தொடர் அல்லது நாற்கர தொடர் ஏன் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்த முடியாது?”

இதையும் படிங்க: உலக கோப்பை தேவை இல்லை.. கிரிக்கெட்டை காப்பாத்த இதை செய்யுங்க.. அழிஞ்சிட்டு வருது – அஸ்வின் கருத்து

“இவர்கள் இருவரும் இன்னும் விளையாடும் காலத்தில் அதிக போட்டிகளில் விளையாடுவதற்கு இதை செய்யலாம். மேலும் இதன் காரணமாக ரசிகர்கள் அதிக அளவில் போட்டியை பார்க்க வருவார்கள். மேலும் இவர்களும் அதிக போட்டியில் குறைந்த காலத்தில் விளையாடுவார்கள். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் யோசிக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.

- Advertisement -