சின்ன டீம் கிடைக்கும் சூரியகுமார் விடாதீங்க.. ஆனா நான் சொல்ற மாதிரி ஆடுங்க – இர்ஃபான் பதான் அறிவுரை

0
16
Irfan

தற்போது பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தவித்து வரும் இந்திய டி20 கேப்டன் சூர்யா குமார் யாதவ் மீண்டும் ஃபார்முக்கு வர என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இர்பான் பதான் அறிவுரை வழங்கி இருக்கிறார்.

இந்திய அணி இன்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாக்பூர் மைதானத்தில் களம் இறங்குகிறது. இதைத்தொடர்ந்து டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி பங்கு இருக்கிறது. இந்த நிலையில் தனிப்பட்ட முறையிலேயே சூரியகுமார் யாதவுக்கு இந்த தொடர் முக்கியமானதாக மாறுகிறது.

- Advertisement -

சூரியகுமார் யாதவின் பிரச்சனை

சூரியகுமார் யாதவுக்கு இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டதற்கு பிறகு அவருடைய பேட்டிங் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர் தொடர்ந்து பல இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் தடுமாறிக் கொண்டு வருகிறார். மேலும் அவரது பலவீனத்தை எதிரணிகள் கணித்தது போல் தெரிகிறது.

அவர் லெஃசைடில் மிகவும் பலமான வீரராக இருப்பவர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் வெளியில் ஃபில்டர்களை நிறுத்திவிட்டு, நேராக இருக்கும் ஃபில்டர்களை உள்ளே கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் அவர் நேராக தூக்கி அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார். அதில் அவருக்கு பிரச்சனை இருப்பதால் உள்வட்டத்திலேயே சிக்கிக் கொள்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் இதை செய்ய வேண்டும்

இது குறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “என் உள்ளுணர்வின் படி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் ரன்கள் குவிப்பார் என்று நினைக்கிறேன். இது டி20 உலக கோப்பைக்கு தயாராக அவருக்கு உதவும் ஏனென்றால் அவர் தற்போது ஃபார்மில் இல்லை. மேலும் டி20 உலக கோப்பையில் இரண்டு மூன்று சிறிய அணிகள் கிடைக்கும். அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க : விராட் வரார் ரன் அடிக்கிறார் லண்டனுக்கு போறார்.. பிசிசிஐ உடனே இதை செய்யணும் – முகமது கைஃப் கோரிக்கை

“சூரியகுமார் யாதவ் நிறைய முறை தனக்கு பிடித்த ஷாட்டை லெக் சைடில் அடிப்பதை பார்த்திருக்கிறோம். பிரச்சனை என்னவென்றால் பந்து ஆப்சைடில் இருந்தால் கூட அவர் அந்தப் பக்கமே தூக்கி அடிக்கிறார். எனவே அவர் உள்ளே விளையாட வந்ததும் சிறிது நேரம் பொறுமையாக இருந்து பிறகு அதிரடியாக விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -