விராட் வரார் ரன் அடிக்கிறார் லண்டனுக்கு போறார்.. பிசிசிஐ உடனே இதை செய்யணும் – முகமது கைஃப் கோரிக்கை

0
72
Kaif

தற்போது சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் விராட் கோலிக்கு பிசிசிஐ ஒரு முக்கியமான விஷயத்தை செய்ய வேண்டும் என முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

கடந்த ஒன்பது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அரை சதங்கள், மூன்று சதங்கள் விராட் கோலி அடித்து இருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அவர் தற்போது முதல் இடத்திலும் இருக்கிறார்.

- Advertisement -

இதைச் செய்ய வேண்டும்

இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” விராட் கோலி இப்போது எப்போதாவது பார்க்கும் வீரராக மாறிவிட்டார். ஆனால் அவர் வருகிறார் ரன் எடுக்கிறார் மீண்டும் திரும்பி லண்டனுக்கு பறந்து விடுகிறார். இப்போது நிலைமை இப்படித்தான் ஆகிவிட்டது. அவர் வருவதும் தங்கள் அடித்து விட்டு திரும்பி செல்வதுமாக இருக்கிறது”

“அதே சமயத்தில் போட்டி பயிற்சி இல்லாமல் ஒரு வீரர் தொடர்ந்து இதை சீராக செய்து கொண்டிருப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாட்டுக்காக விளையாடும் அர்ப்பணிப்பு மற்றும் பெருமை, விளையாட்டின் மேல் அவருக்கு இருக்கும் தீராத பசி மற்றும் ஆர்வம்தான் இதை தூண்டுகிறது”

- Advertisement -

ரோஹித் கேப்டனாக இருக்க வேண்டும்

” விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகப்பெரிய வீரர்கள். கடந்த ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற போதெல்லாம் இவர்கள் இருவர் மட்டுமே ஆட்டநாயகன் விருது வாங்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் விராட் கோலி உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய அவசியத்தில் இல்லை”

இதையும் படிங்க : டி20 உகோ இந்தியா வருவீங்களா?.. நான் பதில் சொல்றது பாதுகாப்பானது இல்லை.. இதுதான் நிலைமை – லிட்டன் தாஸ் பேட்டி

” மேலும் ரோஹித் சர்மா போன்ற ஒரு பெரிய வீரரிடமிருந்து கேப்டன் பொறுப்பை முதலில் பறித்திருக்கக் கூடாது. அதைச் செய்துவிட்டு அவர் சோர்வடைகிறார் என்று சொல்வது தவறானது. அவரே தொடர்ந்து கேப்டனாக இருந்திருப்பதுதான் சரியானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -