இந்திய கிரிக்கெட்

டி20 டீம்ல இருக்கிறதுக்கு.. கில் இத செஞ்சே ஆகணும்.. அடுத்த 5 வாய்ப்பு ரொம்ப அதிகம் – இர்பான் பதான் பேச்சு

இந்திய டி20 அணியில் துவக்க வீரராக கில் தொடர்வதற்கு பேட்டிங்கில் தன்னை நிரூபித்து ஆகவேண்டும் என இர்பான் பதான் வலியுறுத்தி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரும் முன்பாக இது மிகவும் முக்கியமான தொடராக அமைகிறது.

டி20 தொடரின் முக்கியத்துவம்

அடுத்த டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் தவிர அனைத்து போட்டிகளையும் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதன் காரணமாக தற்போது சொந்த மண்ணில் வலிமையான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

மேலும் இந்தத் தொடரில் எப்படியான காம்பினேஷனை அமைத்து உலகக் கோப்பைக்கு செல்லலாம் என்று முடிவு செய்ய முடியும். இந்திய அணி நிர்வாகம் எடுத்ததுமே உலகக்கோப்பைக்கு என்ன பிளேயிங் லெவல் அமைப்பார்களோ அதையே இந்தத் தொடரிலும் அமைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் கில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

- Advertisement -

கில் இதை செய்ய வேண்டும்

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” முதலாவதாக தென் ஆப்பிரிக்க தொடரில் இந்திய டி20 அணியின் துணை கேப்டன் கில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவர் மூன்று வடிவத்திலும் விளையாடக்கூடிய வீரர் என நாங்கள் நம்புகிறோம். ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனாலும் இன்னும் அவர் தன் இடத்தை உறுதிப்படுத்த வேண்டும்”

இதையும் படிங்க : இப்ப எல்லாமே இந்தியா டீம்தான்.. நாங்க எல்லாம் ஒண்ணுமே கிடையாது – பில் சால்ட் ஒப்புதல் பேச்சு

“நிச்சயம் அவருக்கு கொஞ்சம் அழுத்தம் இருக்கும். ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் நன்றாக செயல்படக்கூடிய தரத்தை கொண்டு இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். ஒரு காயத்திற்கு பிறகு அவர் மீண்டும் வருகிறார். அவருக்கு ஐந்து வாய்ப்புகள் கிடைக்க இருக்கிறது. இந்த வாய்ப்புகள் மிகவும் பெரியது. இதில் தன்னை அவர் நிரூபிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by