ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன்கள் வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரை வைக்க வேண்டும் என இர்பான் பதான் கூறியிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக மிகச் சிறப்பான முறையில் ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார். அதற்கு முந்தைய ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக கோப்பையை வென்றார்.
யாரும் செய்யாதது
ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக மூன்று வெவ்வேறு அணிகளை டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்திருக்கிறார். மற்ற எந்த கேப்டன்களுக்கும் இவருடைய சிறப்பு கிடையாது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் பஞ்சாப் அணிக்கு மிகச் சிறப்பான முறையில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் கேப்டனாகவும் சிறப்பான முறையில் ரன்கள் எடுத்திருக்கிறார். இதன் காரணமாக இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது.
இர்பான் பதான் கருத்து
இது குறித்து அவர் பேசும்போது “வெவ்வேறு அணிகளில் இணைந்து அந்த அணி கலாச்சாரத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு கேப்டனாக சிறப்பாக செயல்படுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு வீரர்களுடனும் அவர் சிறந்த புரிதலை ஏற்படுத்தி மூன்று வெவ்வேறு அணிகளை ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்திருக்கிறார்”
இதையும் படிங்க : ஹெட் தூங்குவதால ரன் அடிக்க மாட்டார்.. எனக்கு எதுக்கு மேன் ஆப் தி மேட்ச் கொடுத்தாங்கன்னு தெரியல – கம்மின்ஸ் பேச்சு
“ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன்களான தோனி, ரோகித் சர்மா, மற்றும் கம்பீர் ஆகிய ஒரு வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயரை வைக்க வேண்டும். மற்ற எல்லோரும் ஒரே அணிக்கு கோப்பையை வென்றிருக்கும் பொழுது, ஸ்ரேயாஸ் ஐயர் வெவ்வேறு அணிகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.






