ஹெட் தூங்குவதால ரன் அடிக்க மாட்டார்.. எனக்கு எதுக்கு மேன் ஆப் தி மேட்ச் கொடுத்தாங்கன்னு தெரியல – கம்மின்ஸ் பேச்சு

0
91
Cummins

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

எதிர்பாராத திருப்பம்

தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு கீழே இறங்கி உள்ளது. அதே சமயத்தில் நேற்று அவர்களை வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

மேலும் புள்ளி பட்டியலில் தற்போது ஆறாவது இடம் வரையில் பெரிய அளவில் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் கூட அடுத்தடுத்து தோல்விகள் அடைந்தால் தொடரை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு உண்டு என்பது சுவாரசியத்தை கூட்டுகிறது.

- Advertisement -

ஹெட் தூங்கி விடுவார்

நேற்றைய போட்டியின் வெற்றி குறித்து பேசி உள்ள பேட் கம்மின்ஸ் “நாங்கள் நேற்று பந்துவீச்சில் சிறப்பான முறையில் இருந்ததால் எங்களுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. நாங்கள் சில திட்டங்களை எடுத்து வந்து அதை சரியாக செயல்படுத்தியதன் மூலம் வெற்றி பெற்றோம்”

இதையும் படிங்க : எங்கள் அணிக்குள் அந்த மோசமான வைரஸ் பரவி விட்டது.. அந்த பையனை பார்த்தாலே பாவமா இருக்கு – ரிக்கி பாண்டிங் கருத்து

“பொதுவாக ஹெட் தன்னுடைய குழந்தைகள் அருகில் இல்லாத போதுதான் நிம்மதியாக துவங்குவார். இதனால் பெரும்பாலும் அவர் பகலில்தான் தூங்கிக் கொண்டிருப்பார். எனவே அவர் பகல் போட்டிகளில் சரியாக விளையாடாமல் போவது எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது. மேலும் நான் ஆட்டநாயகன் விருது வென்றது மகிழ்ச்சி. ஆனால் இந்த விருது எனக்கு ஏன் கொடுக்கப்பட்டது என்று தான் புரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -