இந்திய கிரிக்கெட்

ருதுராஜுக்கு நான் சொன்னது நடந்தது.. பிரசித் கிருஷ்ணாவும் இதை கேட்டா நல்லது – இர்பான் பதான் அறிவுரை

தற்போது இந்திய அணையில் இடம்பெற்று விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்த பொழுதும் தோல்வியடைந்தது. பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்த பொழுதும் அவருடைய லைன் அண்ட் லென்த் மோசமாக இருந்தது. அவர் ரங்களை விட்டுக் கொடுத்த காரணத்தினால் இந்திய அணி தோல்வி அடைந்தது.

ருதுராஜுக்கு சொன்னது நடந்தது

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “ருதுராஜ் விக்கெட்டுகளுக்கு இடையில் மிகச் சிறப்பாக ஓடினார். ரிஷப் பண்ட் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இருந்தாலும் கூட இவருக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக இந்திய அணி நிர்வாகத்தை பாராட்டலாம். இன்னும் சிறிது காலத்திற்கு அந்த இடத்தில் அவர் விளையாடுவது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. மேலும் அவரை முதல் இடத்தில் வைத்திருப்பார்களா அல்லது நான்காவது இடத்திற்கு பார்ப்பார்களா என்பது சுவாரசியமாக இருக்கும்”

” தற்போது அவர் நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடி காட்டி இருப்பதின் மூலம் தன்னால் எந்த இடத்தை கொடுத்தாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று நிரூபித்து இருக்கிறார். இந்தத் தொடர் ஆரம்பிக்கும்போதே அவர் முதல் போட்டியில் சரியாக விளையாட விட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். இப்பொழுது தொடர் வாய்ப்பு கொடுக்கும்பொழுது அவர் சிறப்பாக செயல்படுகிறார். அவர் விஷயத்தில் நான் சொன்னது நடந்தது”

- Advertisement -

பிரசித் கிருஷ்ணா இதை செய்ய வேண்டும்

” பிரசித் கிருஷ்ணாவின் உயரம் காரணமாக அவர் கொடுக்கும் பவுன்ஸ் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக அமைகிறது. நீங்கள் இந்தியாவில் விளையாடும் பொழுது உங்களுடைய லைன் மற்றும் லென்த்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த இடத்தில் பிரசித் கிருஷ்ணா ஒரு முக்கியமான தவறை செய்த காரணத்தினால் தான் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்”

இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு செக் வைக்கவா.. ஐபிஎல் தொடரில் இருந்து திடீர் ஓய்வு ஏன்? – ரசல் சொன்ன உண்மை காரணம்

“பிரசித் கிருஷ்ணா பந்தை அதிகமாக மேலே வீச வேண்டும். குறிப்பாக அவர் அதிக அளவில் யார்கர் பந்துகளை வீச வேண்டும். இந்தப் பந்தில் தான் அவர் பிரிட்ஸ்கீ விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். எனவே அவர் இந்த மாதிரியான பந்துகளை வீசுவதை விட்டு விடக்கூடாது. இதைச் செய்தால் அவர் சரியாக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by