கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட ஆண்ட்ரூ ரசல் திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது தனது ஓய்வுக்கு பின்னணியில் இருந்த காரணம் குறித்து தெரிவித்திருக்கிறார்
நடக்க இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் கேமரூன் கிரீனை அதிக பணம் வைத்திருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கும். எனவே ரசலை வாங்குவதற்கு சிஎஸ்கே ஆர்வமாக இருந்தது. இந்த நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
ஐபிஎல் பெரிய தொடர்
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் சிஎஸ்கே அணிக்கு செக் வைப்பதற்காக ரசலை ஓய்வு பெற வைத்து தங்களது பயிற்சியாளர் குழுவில் சேர்த்துக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் தற்போது ரசல் ஓய்வு பெற்றதற்கான உண்மை காரணத்தை கூறி இருக்கிறார்.
இதுகுறித்து ரசல் பேசும் பொழுது “ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் ஆல்ரவுண்டராக இருப்பது எப்பொழுதும் சவால் ஆனது. இங்கு நான் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என எல்லா பக்கத்திலும் தயாராக வேண்டும். இது இந்த வயதில் எனக்கு மிகவும் சவாலானது. ஐபிஎல் மிகப்பெரிய தொடர் என்கின்ற காரணத்தினால், நீங்கள் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தக் கூடிய இடத்தில் தயாராக எப்பொழுதும் இருக்க வேண்டும்”
அதை யோசித்தது கிடையாது
“நான் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவது குறித்து எப்பொழுதும் யோசித்தது கிடையாது. ஏனென்றால் எனது பேட்டிங் பவுலிங்கையும், பவுலிங் பேட்டிங்கையும் நிறைவு செய்கிறது. ஒரு போட்டியில் இரண்டு ஓவர்களாவது நான் பந்து வீச வேண்டுமென்று நினைக்கிறேன். நான் நன்றாக பந்து வீசினால் அது எனது பேட்டிங்கில் எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்”
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தரின் இடம் ரியான் பராக்குக்கு கிடைக்கும்.. ருதுராஜ் மாதிரி இதை பண்ணனும் – அஸ்வின் அறிவுரை
“நான் ஆரம்பத்தில் இருந்தே பேட்ஸ்மேனாக விளையாடி இருந்தால் நான் அப்படி யோசிக்க முடியும். நான் வெறும் இம்பாக்ட் பிளேயர் ஆகவோ அல்லது பெரிய சிக்ஸர்களை மட்டும் அடிக்கக்கூடிய வீரராகவோ என்னை நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்கும் உண்மையாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.






