இந்திய கிரிக்கெட்

ரோகித் சர்மா மாதிரி வரது சூர்யாவுக்கு கஷ்டம்.. உலக கோப்பையை ஜெயிக்கிற இத செய்யணும் – இர்பான் பதான் பேச்சு

இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் மரபை சூரியகுமார் யாதவ் எடுத்துச் செல்வது மிகவும் கடினமானது என்று இந்திய அணியின் முன்னாள் ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா டி20 உலக கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு ஐசிசி தொடர்களை வென்றிருக்கிறார். தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா விட்டுச் சென்ற மரபை சூரியகுமார் அப்படியே எடுத்துச் செல்வது கடினமானது என்று இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

ரோகித் சர்மாவின் சிறப்பு

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பேட்டிங் அணுகுமுறையை அதிரடியாக மாற்றியதோடு அதை தானே துவக்க வீரராக வந்து செய்தார். தற்போது இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் அதிரடியாக இருப்பதற்கு பின்னால் ரோகித் சர்மாவின் ஆரம்ப புள்ளி இருக்கிறது. இரண்டு முறை ஐசிசி தொடர்களை கேப்டனாக வென்ற போது அவருடைய பேட்டிங் சிறப்பாக இருந்திருக்கிறது.

அதே சமயத்தில் ரோகித் சர்மா ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாக மிகச் சிறப்பான திட்டமிடல்களை அமர்ந்து செய்திருக்கிறார். மேலும் மற்ற எந்த இந்திய கேப்டன்களை விடவும் இளம் வீரர்களுடன் அதிக நெருக்கத்தைக் கொண்டு இருந்திருக்கிறார். அவர்களுடன் போட்டி திட்டம் குறித்து விவாதிக்கும் அளவுக்கு அவருடைய நெருக்கம் இருந்திருக்கிறது. இதனால் இளம் வீரர்கள் அதிக தன்னம்பிக்கையை பெற்றார்கள்.

- Advertisement -

சூரியகுமாரால் முடியுமா?

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” பெரிய கேள்வி என்னவென்றால் ரோகித் சர்மா அமைத்த மிகப்பெரிய பாரம்பரியத்தை சூரியகுமார் யாதவால் தூக்கிச் செல்ல முடியுமா? என்பதுதான். ரோகித் சர்மா உருவாக்கி இருக்கும் அந்த மரபை சுமந்து செல்வது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனால் நல்ல விஷயமாக சூரியகுமார் தற்பொழுது பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்”

இதையும் படிங்க : விராட் கோலி கிட்ட கண்ணீர் அடக்கி பேசிக்கிட்டு இருந்தேன்.. சச்சின் எனக்கு சாமி – இஷான் கிஷான் பேட்டி

“டி20 உலகக் கோப்பையை கேப்டனாக அவர் நம்பிக்கை உடன் அணுக இருக்கிறார். இதுதான் முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதைப் பொறுத்து தான் நம் உலக கோப்பையை வெல்வோமா என்பதும் அமைந்திருக்கிறது. தற்பொழுது அவர் மீண்டும் சிறப்பான முறையில் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்கிறார். ஏனென்றால் இந்திய அணி ஒவ்வொரு முறை உலக கோப்பையை வென்ற பொழுதும் அணியின் கேப்டன் களின் தலைமைப் பண்பும் அவர்கள் அணியை வழிநடத்திய விதமும் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by