இந்திய கிரிக்கெட்

உள்நாட்டு கிரிக்கெட் ஈஸி இல்லை.. என்னோட அறிவுரையை கேளுங்க.. நான் சொல்றது இதுதான் – இர்பான் பதான் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் டெஸ்ட் தோல்விகளைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

இந்திய வீரர்களை அறிவுறுத்திய பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளிலும் அதற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து வரலாற்றுத் தோல்விகளை சந்தித்தது. இந்த நிலையில் சிவப்பு பந்து கிரிக்கெட்டை மேம்படுத்தும் வகையில் இந்திய வீரர்கள் அனைவரும் உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியது.

இதன்படி இந்திய வீரர்கள் சமீபத்தில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடி வரும் நிலையில் பெரிதாக யாரும் ரன்கள் அடிக்கவில்லை. ரோகித் சர்மா கில் மற்றும் பண்ட் ஆகியோர் ரஞ்சி டிராபியில் விளையாடிய நிலையில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அதேபோல நேற்று டெல்லி அணிக்காக களம் இறங்கிய விராட் கோலி இன்று களமிறங்கி 6 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் இர்பான் பதான் இதுகுறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நான் வாதிட்டு வருவது இதைத்தான்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடர் தனித்துவமான சவால்களை முன் வைக்கிறது. குளிர்கால மாதங்களில் இந்திய ஆடுகளங்கள் வேறுபடும். இதுவரை நீங்கள் எதிர்கொள்ளாத பந்துவீச்சாளர்கள் உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். வட இந்தியாவில் கருப்பு மண் ஆடுகளம் அதன் நடத்தையை மாற்றும். அதேநேரம் இந்தியாவின் மேற்கில் உள்ள அதே பந்துவீச்சாளர் உங்களை புதிய வழியில் சோதிக்கக்கூடும்.

இதையும் படிங்க:பும்ரா நம்பர் 1 ஆக இருக்க இதான் காரணம்.. அவரிடம் இந்த ஸ்பெஷல் டேலண்ட் இருக்கு – வாசிம் அக்ரம் பேட்டி

நீங்கள் ரன்கள் எடுக்கலாம் அல்லது அவுட் ஆகலாம், ஆனால் சிறப்பாக செயல்பட இந்திய வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் செலவிட வேண்டும் என்று வாதிட்டு வருகிறேன். இறுதியில் ஒரு நவீன கால கிரிக்கெட்டரின் வேலை என்பது ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடுவது குறைகள் மற்றும் காயங்களை சமாளிப்பது தான். இரண்டு மாதங்கள் விளையாடுவதற்காக 10 மாதங்கள் பயிற்சி பெறுவது அல்ல” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts