இந்திய கிரிக்கெட்

அக்சர் பேட்டிங்கில் செஞ்ச அந்த தப்பை வாஷிங்டன் சுந்தர் செய்யல.. இவர விடவே கூடாது – இர்பான் பதான் பேச்சு

நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்த விதம் குறித்து இர்பான் பதான் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 186 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்தில் வந்த வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு அற்புதமான சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

வாஷிங்டனிடம் இது விதிவிலக்கானது

தற்போது வாஷிங்டன் சுந்தர் பேட்டிங் செய்யும் விதம் முற்றிலும் நம்பிக்கை இழப்பதாக இருக்கிறது. முன்பு அவர் ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் அளவுக்கு இருந்தார். ஆனால் கடைசி கட்டத்தில் பெரிய அளவில் அவரால் அதிரடியாக விளையாட முடியவில்லை. ஆனால் தற்போது அவர் சாதாரணமாக பெரிய ஷாட் விளையாடுகிறார். இதனால் குல்தீப் யாதவ் இடத்தில் அவர் இனி தொடர்ந்து இடம்பெற வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” வாஷிங்டன் சுந்தர் சிறந்த பேட்ஸ்மேன் ஆக தெரிந்தார். நீண்ட கழித்து இந்த வடிவத்தில் கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். மேல் வரிசையில் பேட்டிங் செய்ய கொடுக்கப்பட்ட வாய்ப்பை நியாயப்படுத்தி இருக்கிறார். பவுலிங் செய்ய ஒரு ஓவர் கூட தரவில்லை என்றாலும், பேட்டிங்கில் தன்னை நிரூபித்து விட்டார். மேலும் அவர் ஷார்ட் பந்துகளை விளையாடிய விதம் விதிவிலக்காக இருந்தது”

- Advertisement -

அக்சர் படேல் செய்த தவறு

“அச்சர் படேல் ஒரு ஷார்ட் பந்தை விளையாடுவதற்கு இரண்டு கைகளையும் மிக நெருக்கமாக வைத்து ஆடி விக்கெட்டை இழந்தார். அதே சமயத்தில் வாஷிங்டன் சுந்தர் அந்த வகையான பந்தை மிகவும் அற்புதமாக விளையாடினார். அவர் பெரிய ஷாட்டுகளை மிக எளிமையாக அடித்தார். சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கூட காத்திருந்து மிக நேராக சரியாக தூக்கி அடித்தார்”

இதையும் படிங்க : 1983 வெற்றி என்ன செஞ்சதுனு எனக்கு தெரியும்.. இனி இதெல்லாம் நடக்க போகுது – சச்சின் வாழ்த்து

“வாஷிங்டன் சுந்தர் பொறுமையாகவும் அமைதியாகவும் இருந்து தன்னுடைய தேர்வை நியாயப்படுத்தினார். அவரது பேட்டிங் மிகவும் கட்டுப்பாடான முறையில் இருந்தது. மேலும் அவர் தனது ஒற்றை கையால் ஆஸ்திரேலியாவிடமிருந்து போட்டியை முழுக்க பறித்து விட்டார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts