1983 வெற்றி என்ன செஞ்சதுனு எனக்கு தெரியும்.. இனி இதெல்லாம் நடக்க போகுது – சச்சின் வாழ்த்து

0
115
Sachin

நேற்று பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் ஆன இந்திய பெண்கள் அணியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார்.

இந்த போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முன்னாள் கிரிக்கெட் வடிவத்தில் உலக சாம்பியன் ஆனது. இந்திய பெண்கள் அணிக்கு இது முதல் உலகக் கோப்பை வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

1983 வெற்றி

இந்தியா கிரிக்கெட்டில் முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அது இந்தியாவிற்கும் பல இளைஞர்களை கிரிக்கெட் விளையாடவும் கிரிக்கெட்டை தொழில் ரீதியாக விளையாடவும் உள்ளே கொண்டு வந்தது. இந்திய கிரிக்கெட் வளர்வதற்கான ஆரம்ப புள்ளி அந்த வெற்றியாகவே இருக்கிறது.

இந்த வெற்றியில் இருந்து தான் சச்சின் டெண்டுல்கர் உத்வேகம் பெற்று கிரிக்கெட்டராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு முதல் உலகக் கோப்பை கிடைத்ததும் அப்படியான தாக்கத்தை கொண்டு வரும் என சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பலரும் வருவார்கள்

இது குறித்து லெஜன்ட் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ள தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் ” 1983ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றி, பெரிய கனவுகளை காணவும் அந்த கனவுகளை துரத்தவும் தூண்டியது. இன்று நமது பெண்கள் அணி உண்மையிலேயே மிகச் சிறப்பான ஒன்றை செய்திருக்கிறது”

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டின் பெரிய விநோத வீரர்.. இன்று பெண்கள் உலகக் கோப்பை வெற்றி கோச் – யார் இந்த அமோல் மசூம்தார்

” நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் பெண்கள் பேட்டையும் பந்தையும் கையில் எடுக்கவும், களத்தில் இறங்கவும், அவர்களாலும் இப்படி ஒரு பெரிய வெற்றியை பெற முடியும் என ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். இது இந்திய பெண்கள் அணியின் பயணத்தில் ஒரு தீர்க்கமான தருணம். சபாஷ் டீம் இந்தியா. நீங்கள் மொத்த நாட்டையும் பெருமைப்படுத்தி உள்ளீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -