நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மிகச் சிறப்பான முறையில் விளையாட நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இது குறித்து பேசி உள்ள இர்பான் பதான் விராட் கோலிதான் உண்மையான சாமி என பாராட்டி இருக்கிறார்.
நேற்றைய போட்டியில் விராட் கோலி 33 பந்தில் 188 ஸ்ட்ரைக் ரேட்டில் 62 ரன்கள் எடுத்தார். மேலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கிரிஸ் கெயில் 151 சிக்ஸர்கள் அடித்து, ஒரு மைதானத்தில் அதிக சிக்சர் அடித்தவராக சாதனை செய்திருந்தார். இந்த சாதனையை நேற்று விராட் கோலி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் முறியடித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் விராட் கோலி மிகவும் பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்தார். அந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்ற போதும் சிலர் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி கேலி செய்து வந்தார்கள். ஆனாலும் விராட் கோலி சூழ்நிலைக்கு தகுந்தபடிதான் விளையாடுவேன் என்று கூறிவிட்டார்.
அதே சமயத்தில் நேற்று பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் சாதகமாக இருந்த சூழ்நிலையில் விராட் கோலி எடுத்ததும் சிக்ஸர்கள் மூலமாக சிறப்பாக ஆரம்பித்து விளையாடினார். மேலும் 33 பந்தைகளை மட்டுமே சந்தித்து 62 ரன்கள் குவித்தார். இத்துடன் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையையும் சிஎஸ்கே அணிக்கு எதிராக படைத்தார்.
இதுகுறித்து பாராட்டி இருக்கும் இர்பான் பதான் கூறும்பொழுது “அவர் கடந்த காலங்களில் விளையாடியது போல 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆங்கர் ரோலில் விளையாடவும் முடியும். இன்று போல 188 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆக்ரோசமாகவும் செல்ல முடியும். அவர்தான் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் ஒரிஜினல் சாம்பியன். அவர்தான் விராட் கோலி!”
இதையும் படிங்க : சிஎஸ்கே ரசிகர்கள் விரும்பாத விஷயத்தை சொல்றேன்.. யாஸ் தயால் என்கிட்ட சொன்னது இதுதான் – இயான் பிஷப் பேச்சு
“சின்னசாமி மைதானத்தில் தற்போது விராட் கோலியை விட அதிக சிக்ஸர் அடித்தவர்கள் ஐபிஎல் தொடரில் யாரும் கிடையாது. அவர் தற்போது இந்த மைதானத்தில் மட்டும் 152 சிக்ஸர் அடித்திருக்கிறார். அவர்தான் இப்பொழுது உண்மையான சாமி” என்று கூறி இருக்கிறார்.